முகப்பு /புதுக்கோட்டை /

‘தில் இருந்தா தொட்டு பாரு..' விராலிமலை ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய காளைகள்..

‘தில் இருந்தா தொட்டு பாரு..' விராலிமலை ஜல்லிக்கட்டில் கெத்து காட்டிய காளைகள்..

X
விராலிமலை

விராலிமலை ஜல்லிக்கட்டு

Viralimalai Jallikattu | விராலிமலை அருகேயுள்ள கல்குடி முத்துமாரியம்மன் கோவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் பூச்சொரிதல் விழா உற்சாகமாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கல்குடி முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகளுடன் உற்சாகமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

இதேபோல் கல்லுக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த போட்டியில் காளைகள் அவிழ்த்து விடும் வாடிவாசல், அரசு அலுவலர்கள் பார்வையாளர் மாடம், பத்திரிகையாளர்கள் மாடம், கலெக்ஷன் பாயிண்ட், கால்நடை துறை பாயிண்ட், தற்காலிக மருத்துவ முகாம் ஆகியவை அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கோட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் கால்நடை துறையின் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டது.

இதையும் படிங்க : பசுமை... அழகிய சுனைகள்... தேன்கூடு... தேனிமலை முருகன் கோவிலுக்கு போயிருக்கீங்களா... மிஸ் பண்ணக்கூடாத அற்புத இடம்!

இதனைத்தொடர்ந்து, இந்த போட்டியில் சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பார்வையாளர்கள் சார்பில் பணம் முடிப்பு, சில்வர் பாத்திரம், பிளாஸ்டிக் சேர் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்காணவர்கள் திரண்டு இருந்தனர். மாவட்ட மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வாகனங்கள் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

First published:

Tags: Local News, Pudukkottai