முகப்பு /புதுக்கோட்டை /

இன்று கிளர்ச்சி.. நாளை நரம்பு தளர்ச்சி - விராலிமலையில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

இன்று கிளர்ச்சி.. நாளை நரம்பு தளர்ச்சி - விராலிமலையில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

X
போதை

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

Pudukkottai Today News : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தலின்பேரில் வருவாய்த்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற வருவாய் துறையினர், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி போதைப்பொருள் தீமை குறித்து முழக்கமிட்டவாறு சென்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி கடைவீதி வழியாக சென்று தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் மது மயக்கம் தரும், மதியை கெடுக்கும், குடி குடியை கெடுக்கும், சில நிமிடம் இன்பம் தொடர்ந்தால் மீளா துன்பம், மதுப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும், மதுப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு, இன்று கிளர்ச்சி நாளை நரம்பு தளர்ச்சி, மதுப்பழக்கம் உடல் உயிர் ஆன்மாவை அழிக்கும், மதுவால் தனி மனிதனின் சுய கௌரவம், மரியாதை புகழ் அனைத்தையும் கெடுக்கும், இன்று மட்டும் என்பது போய் காலப்போக்கில் நிரந்தர அடிமையாக மாற்றிவிடும், மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டாதீர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் உயிரிழப்பு, உடல் பாகங்கள் இழப்பு மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்.

போதை பொருட்களை தவறாக பயன்படுத்தினால் உடல் மற்றும் மனநலத்திற்கு கேடு தரும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழுக்கமிட்டவாறு கிராமிய கலைஞர்கள் விழிப்புணர்வு பாடல்கள், கலை நிகழ்ச்சிகளுடன் சென்றனர். பேரணியின்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வணிக கடைகளில் வழங்கி சென்றனர். விழிப்புணர்வு பேரணிக்கு விராலிமலை வட்டாட்சியர் சதீஷ் தலைமை வகித்தார். புதுக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா முன்னிலை வகித்தார்.

First published:

Tags: Local News, Pudukkottai