ஹோம் /புதுக்கோட்டை /

சுற்றுவட்டாரமே கூடும் விராலிமலை சந்தை... விளைபொருளை விற்க விவசாயிகளின் முதல் தேர்வு!

சுற்றுவட்டாரமே கூடும் விராலிமலை சந்தை... விளைபொருளை விற்க விவசாயிகளின் முதல் தேர்வு!

விராலிமலை சந்தை

விராலிமலை சந்தை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில்  வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று விவசாய சந்தை நடைபெறும். சந்தை படுத்துதலுக்கு சிறப்புமிக்க ஊராக புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை விவசாய சந்தை விளங்குகிறது. 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று சந்தை நடைபெறும். விளைபொருளை சந்தைப்படுத்த விவசாயிகளின் முதன்மை தேர்வு விராலிமலை சந்தையாக இருக்கிறது. அதன் காரணம் குறித்து தெரிந்துக்கொள்ள விராலிமலை விவசாய சந்தைக்கு நேரடியாக சென்றோம்.

  புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், திண்டுக்கல் போன்ற பிற மாவட்ட விவசாயிகளும் வந்து தங்கள் பகுதியில் விளைகிற காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள், விதைகள் போன்றவற்றை குறைந்த விலைக்கு நிறைந்த தரத்துடன் மக்களுக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

  இதனால் விராலிமலை சுற்றி உள்ள அனைத்து கிராம மக்களும் மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்கின்றனர்.

  இதையும் படிங்க : புதுக்கோட்டையில் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த நாள் தான் கடைசி - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

  சுமார் 800க்கும் அதிகமான கடைகளில் இங்கு விவசாயிகள் தங்கள் விளைபொருளை நேரடியாக சந்தைப்படுத்துகின்றனர். அதனால் தங்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

  அதேபோல் பொதுமக்களுக்கும் மலிவான விலையில் காய்கறி, கீரைகள் ஆகியவை கிடைப்பதால் இந்த சந்தையை தவறவிடுவதில்லை என இல்லத்தரசி திருமதி விஜயா தெரிவித்தார்.

  அதேபோல் வாரா வாரம் இங்கு நடத்தப்படும் ஆட்டு சந்தையும் மக்களிடம் பிரபலம். செம்மறி ஆடு, வெள்ளாடு என பல வகையான ஆடுகள் இந்த சந்தையில் கிடைக்கும். காலை 6 மணி முதல் 10 மணி வரை சந்தை நடைபெறும்.

  இதையும் படிங்க : புதுக்கோட்டை விராலூர் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத சுகாதார நிலையம்

  புதுக்கோட்டை மற்றும் திருச்சி சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தங்கள் ஆடுகளை இங்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்று செல்கின்றனர்.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  அதுவும் தீபாவளி மற்றும் ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்கள் என்றால் சந்தை களைகட்டிவிடும். ஆடுகளை விற்க விவசாயிகளும் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் கூட்டமாக குவியும் இடமாக விராலிமலை ஆட்டுச்சந்தை இருக்கிறது.

  செய்தியாளர் : ஸ்னேகா - புதுக்கோட்டை

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukkottai