முகப்பு /புதுக்கோட்டை /

மக்களிசை பாடகி தேன்மொழி.. புதுக்கோட்டைல இவங்க ரொம்ப ஃபேமஸ்..

மக்களிசை பாடகி தேன்மொழி.. புதுக்கோட்டைல இவங்க ரொம்ப ஃபேமஸ்..

X
மக்களிசை

மக்களிசை பாடகி தேன்மொழி

Pudukkottai News : புதுக்கோட்டை மாவட்டம் கலபம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தேன்மொழி. இவர் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கலபம் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவர் தனது 11 வயதில் இருந்து கிராமிய பாடல்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு பாடி வருகிறார். தற்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி வருகிறார் தேன்மொழி. இதுகுறித்து தேன்மொழி பேசியபோது, “வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோக்களில் பாடல்கள் கேட்டதை விட அம்மா பாடுவதை கேட்டதே அதிகம். 11 வயதில் இருந்தே நான் பாடல்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

பல்வேறு வகையான நாட்டுப்புற பாடல்களை நாங்கள் பாடுவோம். கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள், விழிப்புணர்வு பாடல்கள், ஆகிய அனைத்து வகையான பாடல்களையும் கிராமிய பாடல்களைப் போல பாடுவோம்.

கிராமிய பாடல்களை முதலில் தாலாட்டு இசையுடன் அதாவது தன்னகரத்துடன் தொடங்குவோம். இதுபோல வயல்வெளி பாடல்கள், திருவிழா பாடல்கள், காதல் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள் போன்றவையும் பாடி வருகிறோம். அதுமட்டுமல்ல தற்போதைய சினிமா பாடல்களையும் எங்கள் கிராமிய இசையில் பாடுவோம். ஒரு ஊருக்கு திருவிழாவுக்கு செல்கிறோம் என்றால் அந்த ஊர் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடல்களை பாடி மகிழ்விப்போம்.

கலை நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஊர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றாக இருந்தது என்றும், கன்னத்தை கிள்ளுவது, கொஞ்சுவது போன்ற எங்கள் பாடல்களை ரசிப்பவர்கள் சந்தோசங்களுக்காகவே இன்னும் பாடிக்கொண்டே இருப்போம். தற்போது கிராமிய பாடல்களை மக்கள் அதிக அளவில் விரும்புகிறார்கள். கிராமிய பாடல்களுக்கு தற்போது அதிக வரவேற்பு கிடைத்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pudukkottai