முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / வேங்கைவயல் விவகாரம்... தீவிரமாகும் சிபிசிஐடி விசாரணை..!

வேங்கைவயல் விவகாரம்... தீவிரமாகும் சிபிசிஐடி விசாரணை..!

வேங்கைவயல் விவகாரம்

வேங்கைவயல் விவகாரம்

Vengaivayal Issue | வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, வேங்கைவயல் கிராமத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். அதில் முன்னேற்றம் ஏற்படாததால், இந்த வழக்கை கடந்த ஜனவரி 14ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர், பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று 147 பேரிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்தனர். இந்நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் வேங்கைவயல் மற்றும் இறையூர் ஆகிய கிராமங்களில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க; கணவனை இழந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து தொல்லை- திருச்சி இளைஞர் கைது...

சம்பவ நாளன்று அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையிலான ஒரு நபர் குழு, வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Pudukottai- Important news