புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மாரி கண்ணன் - முத்துலட்சுமி தம்பதியினர் அந்த காலத்திலேயே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்து அரை நூற்றாண்டு வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த போதும் அத்தனையையும் ஒற்றுமையுடன் கடந்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளனர் இந்த காதல் பறவைகள். இவர்களின் காவிய காதல் பற்றி அறிந்துகொள்வோம்.
பொட்டுகட்டி கோயில்களில் கடவுள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இந்த தேவதாசி முறை பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காரணத்தால் 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் ஒரு சில இடங்களில் இந்த முறை அழியாமல் வலம் வந்து கொண்டிருந்தது.
முத்துலட்சுமியின் வீட்டில் அவரை கோவிலுக்கு தேவதாசியாக அதாவது கோவிலுக்கு சேவகம் செய்வதற்காகவே மாற்ற இருந்த நிலையில் அவர் அதனை எதிர்த்து தனது காதலனை கரம் பிடித்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி தனது காதலனை திருமணம் செய்தார் முத்துலட்சுமி பாட்டி.
இருவரும் திருமணம் செய்த காலங்களில் அதிகமான பொருளாதார கஷ்டங்களை சந்தித்துள்ளனர். ஆனால் ஒரு நாளும் அன்பிற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம் என்று தெரிவிக்கின்றனர் இந்த தம்பதியினர். மேலும் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அது அப்போதே சமாதானமாகி அழகான காதல் வாழ்க்கை இன்று வரை வாழ்கிறோம் என்று தெரிவிக்கின்றனர்.
மாரிக்கண்ணன் மற்றும் முத்துலட்சுமி இருவரும் பட்டதாரிகள். திருமணத்திற்கு பிறகு மாரிக்கண்ணன், பள்ளி குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து அதன் மூலம் வரும் வருவாயை வைத்து தங்களது குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களையும் நன்கு படிக்க வைத்து தற்போது அவர்களுக்கும் காதல் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
கிராமிய பாடல்களில் கலக்கும் புதுக்கோட்டையின் சூப்பர் சிங்கர்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukottai