முகப்பு /புதுக்கோட்டை /

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய தேரோட்ட திருவிழா!

வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் களைகட்டிய தேரோட்ட திருவிழா!

X
வடகாடு

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Vadakadu car festival | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

  • Last Updated :
  • Pudukkottai, India

ஆலங்குடி அருகே கோலாகலமாக நடைபெற்ற வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த வடகாடு முத்துமாரியம்மன் கோவிலானது, இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்முடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, இந்த கோவிலின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வானவேடிக்கையுடன் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த தேரோட்ட திருவிழாவில் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு மற்றும் அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனின் தேரை பக்தி பரவசத்தோடு இழுத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ALSO READ | கரூர் கிராமத்திற்கு புதிய காவல் நிலையம் வேண்டும்.. புதுக்கோட்டை மக்கள் கோரிக்கை!

மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க ஆயிரக்கணக்கான பக்தர்களின் வீதிஉலா காட்சிகளுக்குப் பின் மீண்டும் கோவில் வளாகம் முன்பு நிலை நின்றது. இதனைத் தொடர்ந்து இக்கோயிலின் மஞ்சள் நீர் திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. கோவில் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Car Festival, Local News, Pudukkottai