ஹோம் /புதுக்கோட்டை /

யூடியூப் மூலம் தொழில் முனைவோராகிய புதுக்கோட்டை பெண்கள்!

யூடியூப் மூலம் தொழில் முனைவோராகிய புதுக்கோட்டை பெண்கள்!

தொழில் முனைவோராகிய புதுக்கோட்டை பெண்

தொழில் முனைவோராகிய புதுக்கோட்டை பெண்

Pudukottai District News : புதுக்கோட்டியில் யூ டியூப் மூலம் நகை தயாரிக்க கற்றுக்கொண்டு ,அதை சந்தைப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளனர் இந்த நீவீன யுக பெண்கள் சுய உதவிக்குழு பெண்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Pudukkottai, India

  சமூக வலைத்தளங்கள் நன்மைக்கா அல்லது தீமைக்கா என்ற வாதம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க அதை நாம் பயன்படுத்தும் வழியில் உள்ளது. சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் ஏற்றம் உண்டு என்பதை இந்த உலகத்திற்கு உரக்க சொல்கின்றனர் புதுக்கோட்டை மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்.

  புதுக்கோட்டையில் அம்மன் மகளிர் சுய உதவி குழு பெண்கள், செயற்கை நகைகளை தயாரித்து அதை விற்பனை செய்து வருகின்றனர். கல்லூரி பெண்கள் விரும்பி அணியும் வகையில் காதணிகள், செயின்கள் மற்றும் அனைத்து வகையான அணிகலன்களைஅழகாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

  தேவையான உதிரி பாகங்களை மொத்தமாக வாங்கி பின் எந்த வடிவத்தில் எந்த டிசைனில் ஆர்டர்கள் தருகிறார்களோ அதே டிசைனில் சமூக வலைத்தளமான யூடியூபைபார்த்து தயாரித்து கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த தொழில் பழக யூடியூப் மிகவும் பயனுள்ளதாகஇருப்பதாக கூறுகின்றனர் அம்மன் சுய உதவி குழு பெண்கள்.

  இதையும் படிங்க : 0ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு புதுக்கோட்டையில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

  சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒரு தொழிலை தொடங்கி யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு இதனை தற்போது சந்தைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளதாக இந்த பெண்கள் தெரிவித்தனர்.

  மேலும் இவர்கள் செய்யும் இந்த செயற்கை நகைகளை பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாகவும் புதுப்புது டிசைன்களில் ஆர்டர்களும் வருகிறது என்றும் இது தங்களுக்கு ஒரு நல்ல சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

  இந்த தொழில் மூலம் குடும்பத்தில் தங்களது பங்களிப்பை வழங்க முடிகிறது என்றும் குழந்தைகளை படிக்க வைக்க வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க மற்றும் அன்றாட செலவுகள் ஆகியவற்றிற்கு தங்களால் இயன்ற உதவிகளை குடும்பத்திற்கு செய்ய முடிவதாக தெரிவித்தனர்.

  தொழில் முனைவோரை அடையாளும் காணுவதில் மற்றும் வாழ்வில் ஏற்றம் அளிப்பதில்சமூக வலைதளங்கள் சிறப்பான பங்காற்றி வருகின்றன.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  தற்போது அதிக எண்ணிக்கையில்ஆன்ட்ராய்டு போன் வைத்து கொண்டு பொழுதுபோக்கு மற்றும் ஆன்லைன் விளையாட்டு போன்றவற்றில் மக்கள் கவனம் செலுத்தி நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஆனால் சில பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த போன் மூலம் சமூக வலைத்தளஙகளை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையில் ஏற்றத்தை காணமுடியும் என்று எடுத்துக்காட்டாய் விளங்குகின்றனர்.

  புதுக்கோட்டை செய்தியாளர் - சினேகா

  Published by:Karthi K
  First published:

  Tags: Local News, Pudukottai