முகப்பு /புதுக்கோட்டை /

பயிர் ஊக்கியாக செயல்படும் முட்டை கரைசல் செய்வது எப்படி? செயல்முறை விளக்கம் தரும் புதுக்கோட்டை பெண் விவசாயி

பயிர் ஊக்கியாக செயல்படும் முட்டை கரைசல் செய்வது எப்படி? செயல்முறை விளக்கம் தரும் புதுக்கோட்டை பெண் விவசாயி

X
மாடி

மாடி தோட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் லட்சுமி

Pudukottai Terrace Gardening | புதுக்கோட்டையில் இயற்கை முறையில் வீட்டில் மாடி தோட்டம் வைத்து அசத்தி வருகிறார் பெண் ஒருவர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

இயற்கை விவசாயம் மாடித்தோட்டம் ஆகியவற்றிற்கு செடிகளின் வளர்ச்சி ஊக்கியாக இந்த முட்டை எலுமிச்சை கரைசல் பயன்படுகிறது. நுண்ணூட்ட சத்துக்களை அதிகரிக்க இந்த முட்டை கரைசல் பயன்படும். அதேபோல் இலைகள் வெளுத்து போவதை தடுக்கவும் உதவுகிறது. சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் மண்ணை வளப்படுத்தவும் இந்த கரைசல் உதவுகிறது. சரி இந்த கரைசலை எப்படி தாயாரிப்பது என்பதை நம்மிடையே விளக்குகிறார் புதுக்கோட்டை விவசாயி லட்சுமி.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடிய காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் லட்சுமி இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறையில் ஆரோக்கியமான காய்கறிகள் பயிர் செய்து அசத்தி வருகிறார்கள்

இந்த நிலையில் இயற்கை முறை விவசாயத்திற்கு பயன்படும் முட்டை எலுமிச்சை அமிலம் தயாரிப்பது குறித்து பேசிய லட்சுமி, இந்த கரைசலை அனைத்து வகையான பயிர்களுக்கும் நாம் பயன்படுத்த முடியும் என்றும் இதனை தயார் செய்வதற்கு நாட்டுக்கோழி முட்டை எலுமிச்சை சாறு,வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அதை காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும் என கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து 15 நாட்கள் கழித்து எடுத்து அதை நன்கு கலக்கி விட்டு, 30 மில்லி லிட்டர் இந்த முட்டை அமிலத்துடன் 18 லிட்டர் தண்ணீர் கலந்து பயிர்களுக்கு செடிகளுக்குத் தெளிக்கலாம் என்றார். இந்த கரைசலை பயன்படுத்துவதன் மூலம் மண்வளம் மேம்படும் மற்றும் இக்கரைசல் சிறந்த பூச்சி விரட்டியாகவும் இருக்கும் என்றும் விவசாயி லட்சுமி தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Pudukottai