புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்து பாரம்பரிய உணவு வகைகளை பார்வையிட்டார்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி அத்தகைய நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உணவே மருந்து என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், குழந்தை பருவம் முதலில் சத்தான உணவினை ஊட்டச்சத்துடன் சேர்த்து கொடுத்து வர வேண்டும். இப்படி அளித்தால் மனித குலத்தை அச்சுறுத்தும் நீரிழிவு நோய், உடல் பருமன் ஆதல் அதிக ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு தொற்று நோய்களை கட்டுப்படுத்த முடியும்.
சத்தான உணவு என்பது போதுமான அளவு நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கியது. நமது பாரம்பரிய உணவில் மனிதருக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துகளும் நிறைந்துள்ளது. இதனை வலியுறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் -மக்கள் இயக்கம் 2022 மூலம் புதுக்கோட்டை மாவட்ட திட்ட அலுவலகத்தின் சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் சிறுதானிய உணவு வகைகள், பழங்கள், காய்கறி வகைகள், மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகள் மக்களுக்கு காட்சி படுத்தி அவற்றின் செய்முறைகள் மற்றும் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டது. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரம்பரிய உணவு வகைகள் இன் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர் : சினேகா விஜயன் - புதுக்கோட்டை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai