ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க...

மின் தடை

மின் தடை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளைய (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, மின்தேவை இருப்பவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள கொன்னையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன் கிழமை) நடைபெற உள்ளது. எனவே, இந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, கொன்னையூர் துணை மின் நிலைய பகுதியல் இருந்து மின்வினியோகம் பெறும், கொப்பனாப்பட்டி, பொன்னமராவதி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, ஏனாதி, பிடாரம்பட்டி, தொட்டியம்பட்டி, மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, வலையப்பட்டி, வேகுப்பட்டி, காட்டுப்பட்டி, செம்பூதி, கொன்னைப்பட்டி, சுந்தரசோழபுரம், மேக்கினிப்பட்டி, செவலூர், கோவனூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்பட லிஸ்ட்!

இதேபோல, வாழைக்குறிச்சி, நெய்வேலி, கூடலூர், மேலப்பனையூர், குழிபிறை, பணையப்பட்டி, ஆத்தூர், ஆலவயல், செம்மலாப்பட்டி, கண்டியாநத்தம், தூத்தூர், சொக்கநாதபட்டி, அம்மாபட்டி, நகரப்பட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என்று மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Pudukkottai