ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் நாளைய (செவ்வாய்கிழமை) மின்தடை பகுதிகள் - இதில் உங்க பகுதி இருக்கா?

புதுக்கோட்டையில் நாளைய (செவ்வாய்கிழமை) மின்தடை பகுதிகள் - இதில் உங்க பகுதி இருக்கா?

மாதிரி படம்

மாதிரி படம்

புதுக்கோட்டையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11.10.2022) மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பகுதி இருக்கிறதா என்று செக்பண்ணிக்கோங்க.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

பராமரிப்பு பணி காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, நார்த்தாமலை, இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் நாளை (அக்டோபர் 11.2022) மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் விராலிமலை, விட்டமாபட்டி, நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளுர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

வடுகப்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், முல்லையூர், புதுப்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, கீரனூர் அடுத்துள்ள குளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் (கீரனூர் பேரூராட்சி பகுதி நீங்கலாக) குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரகதாம்பாள்புரம், கிருஷ்ணம்பாரப்பட்டி, சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியக்குடி, தாயினிப்பட்டி விளத்துப்பட்டி, ஒடுக்கூர் மற்றும் நார்த்தாமலை ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பொன்னமராவதியில் ரகசியமாக வாங்கி சென்றது இந்த பொருளை தானா?

மேலும், இலுப்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர் மற்றும் பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி,

பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளிலும், அன்னவாசல் துணைமின் நிலையத்தை சேர்ந்த அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார். எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிப்போர், தேவையான முன்னேற்பாடுகளை செய்துகெள்ளுங்கள்.

Published by:Arunkumar A
First published:

Tags: Pudukkottai