ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர நாளை இறுதி நாள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர நாளை இறுதி நாள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Tomorrow is The Last Day To Join Home Guard in Pudukottai | புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படையில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் மிகுந்த ஆர்வம் காடடி வருகின்றனர். இந்த பணிக்கான ஆட்கள் தேர்வுக்கு நாளை இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சேர இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க ; புள்ளிங்கோ ஸ்டைலில்  சிகை அலங்காரம் - புதுக்கோட்டையில் சலூன் கடைகளுக்கு நோட்டீஸ்

முன்னதாக விண்ணப்ப படிவங்கள் வினியோகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே தனது அலுவலகத்தில் வைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், ஆட்கள் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இது, நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

இதில் ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலை 10 முதல் மாலை 5 மணி வரை கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வரை. உடற்தகுதிகள், காவல்துறையை போன்றது. குற்ற வழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூரின்றி செயல்படலாம். இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரியபடித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஊர்க்காவல் படையில் மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukottai