புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் துலாம்,விருச்சிகம் மற்றும்தனுசு ஆகிய ராசிகளுக்கான மே மாத பலன்களை கணித்துக் கூறியுள்ளார்.
துலாம்
தற்பொழுது உங்களுக்கு லாபம் தேடி வரும் புதிய பொருட்களை வாங்குவீர்கள் உடல் நலத்தில் சிறப்படைவீர்கள். சகோதரர் நிலை உயர்ந்தாலும் உங்களிடம் பகைமை பாராட்டுவார்கள். இந்த மாதம் முழுவதும் குடும்பத்தில் ஒரு வித பதட்டம் ஏற்படும். மே 15க்கு பிறகு இருக்கின்ற இடம் நிலத்தில் பிரச்சனைகள் தோன்றும். பணம் நகைகளை கையாளும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாகனங்களை இரவல் வாங்கி ஓட்டாதீர்கள். மே 20 நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்
பொருளாதாரத்தில் ஒரு தேக்க நிலை ஏற்படும். குழந்தைகளின் கல்விச் செலவு மிகுந்தாலும் கல்வியில் முன்னேற்றம் உண்டு. தொழிலில் லாபம் காண்பீர்கள் ஆயினும் கடன் ஏறிக்கொண்டே போகும் உடல் நலக்குறைவால் சில முயற்சிகள் தடைப்பட்டு முன்னேற்றம் சற்று பாதிக்கப்படும் புதிய தொழில் தொடங்குவீர்கள் என்றாலும் அதிக முதலீடு செய்து விடாதீர்கள் உணவு கட்டுப்பாடு தேவை மே 22, 23 ,24 எச்சரிக்கை தேவை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தனுசு
ஏழரையில் இருந்து விடுதலை. குரு நல்ல இடத்தில் வெற்றியும் உத்தியோக மேன்மையும் ஏற்படும். தங்களின் முன்னேற்றமும் குழந்தைகளின் முன்னேற்றமும் உறுதியாக ஏற்படும். மே 12க்கு பிறகு ஒரு தேக்கம் ஏற்படும். அந்த நாள் முன்னரே திட்டமிட்டு காரியங்களை முடிக்க முயற்சிக்க வேண்டும். பெண்கள் சில பேருக்கு கர்ப்ப சம்பந்தமான நோய்கள் தோன்றும்.மே 24, 25, 26 முன்வைத்த காலை பின் வைக்க நேரிடும். முயற்சிகளில் தோல்வி ஏற்படும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai