புதுக்கோட்டை மாவட்டத்தில் 45 வருடங்களுக்கு மேலாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வரும் சௌ.மாரிக்கண்ணனின் கணிப்பில் காதலர் தினத்திற்கான சிறப்பு ராசி பலன்கள் தொகுப்பு.
மேஷம்
மேஷ ராசியை தங்கள் ராசியாக பெற்றுள்ள காதலர்கள் மனநிலையில் தடுமாற்றம் காண்பார்கள். மனம் எந்தவித முடிவிற்கும் வராமல் அமைதியற்று காணப்படும். வண்டி வாகனங்கள் ஓட்டும்போது கவனம் தேவை தங்கள் காதலர்களிடம் பேசும்போது கவனமாக கையாளுங்கள். சிலர் சில ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். சில திட்டங்கள் தள்ளிப்போகும். திருமணத்தில் அவசரம் வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசியை தங்கள் ராசியாக கொண்டுள்ள காதலர்களே இரண்டில் ஒன்று கேட்டுவிடும் கோபத்தில் இருப்பீர்கள். உணர்ச்சி வசப்படாமல் செயல்பட்டால் உங்கள் எண்ணங்கள் கைகூடும். உங்கள் காதலரை எந்த விஷயத்திற்காகவும் வற்புறுத்தாதீர்கள். சிலருக்கு திடீரென்று திருமணம் கூடும் பேச்சுவார்த்தையின் மூலம் எதிர்ப்பு அடங்கும்.
மிதுனம்
மிதுன ராசி காதலர்களே உங்கள் மனம் நிம்மதி அடையும் வழிகள் பிறக்கும். தாயின் உதவி கிடைக்கும். எல்லை மீறி அதையும் செய்ய வேண்டாம் நினைத்தது கைகூடும். உணர்ச்சிக்கு இடம் கொடுக்காத இருந்தால் வெற்றிக்கனி கைவரும்.
கடகம்
கடக ராசியில் பிறந்த காதலர்களே மனதில் என்ன அலைகள் தோன்றி துரும்பு போல் தடுமாறுவீர்கள். விபரீத முடிவுகளை எடுத்து விடாதீர்கள். ஏனெனில் பின்னாளில் தெளிவு உண்டாகும். திருமணங்களுக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் சிலரிடம் நீங்கள் ஏமாற நேரிடலாம்.
சிம்மம்
சிம்மராசியை சேர்ந்த இருபால் நண்பர்களே எதிர்ப்புகளை தாண்டி உங்கள் காதலில் வெற்றி பெறுவீர்கள். திருமண கனவு நிறைவேற வாய்ப்பு உண்டு. ஒரு மன தைரியம் கை கொடுக்கும். குடும்பத்தில் சிலர் பகை கொண்டாலும் முடிவில் உங்களுக்கே வெற்றி. அதே சமயத்தில் ஒரு சிலர் தங்கள் பெருந்தன்மையால் ஏமாற்றத்தை சந்திக்கலாம். சிலர் தங்கள் காதலர் காதலிகளுக்கு பணம் செலவிட நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் பிறந்து காதலித்து கொண்டிருக்கும் இருபால் அன்பர்களே சற்று கவனம் தேவை. நேற்று வரை இருந்த நட்பு திடீரென்று முறிய வாய்ப்பு உண்டு. எதை கேட்டாலும் பார்த்தாலும் தவறாக எடை போடுவீர்கள். பேச்சில் கபடத்துடன் பேசாதீர்கள். உங்களுடைய மன வேற்றுமை ஏற்படும் விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போக வேண்டும்.
துலாம்
துலாம் ராசியுடன் பிரியமாக காதலித்துக் கொண்டிருப்பவர்களே உங்களுக்கு ஏன் இந்த அவசரம். மண்டைக்குள் குடைச்சலை கொடுத்துக் கொண்டிருப்பார். உங்கள் காதலர் காதலி மனதில் அமைதி இராது. சிலருக்கு குழப்பத்தில் குடும்ப வாழ்க்கை அமையும். உங்கள் உறவினர்கள் உடன்பிறப்புகள் உங்கள் பக்கம் இருக்க மாட்டார்கள். உங்கள் உடல் நிலையிலும் காதலர்களின் உடல் நிலையிலும் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு பிறகு காதல் கடலில் நீந்தி கொண்டிருப்பவர்களே இனிய உறவில் இன்பம் கண்டு கொண்டிருப்பீர்கள். காதல் கடலில் மூழ்கி இன்பம் என்ற முத்து எடுக்கப் போகிறீர்கள். பிறர் எதிர்ப்பெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. உங்களுக்கு பெற்றோர் ஆதரவு உண்டு. ஆன்மீக தலங்களுக்கு உங்கள் அன்பானவருடன் பயணம் செய்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல் காரியத்தை சாதித்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்து காதல் கோடியே பறக்க விட்டுக் கொண்டிருப்பவர்களே. சற்று பொறுமையும் நிதானமும் தேவை. உங்களை கோபப்படுத்துகிற சம்பவங்கள் நடக்கும். காதல் பற்றிய சிந்தனைகளில் உங்களை உங்கள் மூளை சூடேறும் சிலருக்கு காதல் விஷயத்தில் சந்தேகம்படும்படியான சம்பவங்கள் நடைபெறும். சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியில் பிறந்து காதலில் ஈடுபட்டு கொண்டிருப்பவரே. காதலை தொடர்வதா அல்லது விடுவதா என்ற குழப்பம் வந்துவிடும். சில காரணங்களால் உங்கள் உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்படும். உங்கள் சந்திப்பில் விவாதங்கள் தோன்றும் நலமில்லா சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
கும்பம்
காதல் வலையில் சிக்கிக் கொண்டுள்ள கும்ப ராசிக்காரர்களே விடுபடுவது தெரியாமல் விழிக்கிறீர்களா? உங்கள் ரகசிய சந்திப்புகள் நன்மை தராது. ஆனால் உங்கள் காதலை பொறுக்க முடியாதவர்கள் தோல்வி அடைவார்கள் சிலருக்கு திடீர் திருமணங்கள் நடக்க வாய்ப்புண்டு.
மீனம்
காதல் கடலில் நீந்தி கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களே, காதல் கை கூடி கனிந்திடும் திருமணத்திற்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான அமைதியை பெறுவார்கள். உங்கள் பிரியமானவர்களிடம் வாக்கு கொடுத்து விடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai