ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த நாள் தான் கடைசி - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுக்கோட்டையில் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய இந்த நாள் தான் கடைசி - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

நெற்பயிர்களுக்கு காப்பீடு

நெற்பயிர்களுக்கு காப்பீடு

Pudukkottai District News | இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல்லுக்கு பிரிமீயம் தொகையாக ஏக்கருக்கு ரூ.488.05 செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், நெல்லுக்கு பயிர் காப்பீடு தேதி வரும் 15ம் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளதாவது: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் அனைவரும் தொடர்ந்து பயிர் காப்பீடு கொள்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் நலன் கருதி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பயிர் காப்பீடு செய்யப்படும்.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் இந்த ரக விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

இது தவிர மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு பணி மேற்கொள்ளப்படும். இதுவரையிலும் காப்பீடு செய்யாத விவசாயிகள் இவ்வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்தி தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிரினை உரிய ஆவணங்களுடன் தங்கள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது பொது சேவை மையங்களிலோ உடனடியாக பயிர் காப்பீடு செய்யலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Farmers, Local News, Pudukkottai