Home /pudukkottai /

சொந்த செலவில் நர்சரி.. நேரடியாக சென்று மரங்களை நட்டு பராமரித்து புதுக்கோட்டையை பசுமையாக்கி வரும் அதிசய மனிதர்..!!

சொந்த செலவில் நர்சரி.. நேரடியாக சென்று மரங்களை நட்டு பராமரித்து புதுக்கோட்டையை பசுமையாக்கி வரும் அதிசய மனிதர்..!!

புதுக்கோட்டையை

புதுக்கோட்டையை பசுமையாக்கி வரும் அதிசய மனிதர்..!!

Pudukkottai Maram Raja | புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த காய்கறிக் கடை நடத்தி வரும் ’மரம்’ ராஜா. மரங்களுக்காகவே அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வரும் இவரை புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மரம்.ராஜா என்றே அன்புடன் அழைக்கின்றனர். இவரை பற்றி விரிவாக காண்போம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில், முழுவதும் குடியிருப்புகள் சூழ்ந்திருக்கும் இடத்தில், முற்றிலும் தன்னுடைய சொந்த செலவில் நண்பரின் இடத்தில் நர்சரி ஒன்றை நடத்தி வருகிறார் காய்கறி  கடைக்காரரும் மர ஆர்வலருமான ’மரம்’ ராஜா. ஆனால் இந்த நர்சரியில் வளர்க்கப்படும் கன்றுகளை இவர் பணத்துக்காக விற்பதும் இல்லை, யாருக்கும் இலவசமாக கொடுப்பதும் இல்லை.

பின்பு எதற்காக இந்த நர்சரி என்கிறீர்களா? இங்கு வளர்க்கப்படும் செடிகளை இவரே நேரில் சென்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு நிலங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் நடவு செய்து அதை பராமரித்து வளர்த்தும் வருகிறார் இந்தக் காய்கறி கடைக்காரர். அவரைப்பற்றி தான்  இன்று விரிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மரம் ராஜாவின் தனி ரூட்:

பொதுவாக   நர்சரி  நடத்துபவர்கள் மரக்கன்றுகளை வளர்த்து அதை விற்பனை செய்வார்கள் அல்லது அவற்றை கொண்டு சென்று அன்பளிப்பாக எல்லோருக்கும் கொடுத்து மரமாக வளர்த்து விடுங்கள் என சொல்லுவார்கள்.

இதையும் படிங்க:   புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகமாக செயல்படும் 100 ஏக்கர் தொண்டைமான் அரண்மனை- சிறப்புகள் என்ன?

ஆனால் இவர் சற்று வித்தியாசமாக,  நர்சரி கார்டன் உருவாக்கி அதில் ஆயிரக்கணக்கான மரக் கன்றுகளை உற்பத்தி செய்து. அவற்றைக் கொண்டு சென்று அரசு அலுவலகங்கள், அரசு இடங்கள் போன்ற பகுதிகளில் அந்த கன்றுகளை வைத்து அவை மரமாக வளரும் வரை பராமரித்துக் கொண்டு இருக்கிறார். இதுவரையிலும் ஆயிரக்கணக்கான மரங்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்திருப்பதாகச் சொல்கிறார்

மரம் ராஜா


.

 

சொந்த செலவில் நர்சரி:

இவருடைய  புதுக்கோட்டை நகர் காய்கறி மார்க்கெட்டில், காய்கறி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை நான்காக பிரித்து அதில் ஒரு பகுதியை குடும்பத்திற்கும் மீதம் உள்ள 3 பகுதியை கன்றுகளை வைத்து வளர்ப்பதற்கும் அவற்றை உற்பத்தி செய்வதகும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார். மரக்கன்றுகளை கூட இவர் மரக்குழந்தைகள் என்றே குறிப்பிடுவது மரங்களின் மீதான இவரின் அன்பை காட்டுகிறது.

இதையும் படிங்க:   பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கொடும்பாளூர் இதுதானா...

அழிந்து வரும் இனங்கள்:

மரம். ராஜாவின் நர்சரியில் அழிந்து வரும் பாரம்பரிய மர வகைகளான காசி வில்வம், கருங்காலி, கடுக்காய், கருமருது, கலாசிக்காய், கற்குவாச்சி, கடம்பு, குடம்புளி, கிருஷ்ண பாலை, கூந்தல் பனை, விசிறிப்பனை, நாகலிங்கம், இலைபுரசு, பூமருது, பாக்கு, பன்னீர் பூ, திருவோடு, தேத்தான், பாரிஜாதம், பவளமல்லி, புன்னை, பூந்திக்காய், எட்டி, ஈட்டி (தோதகத்தி) மகிழம், மந்தாரை, மனோரஞ்சிதம், மலையத்தி,மலைவேம்பு, வேங்கை, ருத்ராட்சம், தான்றீ, இருவாச்சி, சீயக்காய், ஆத்தி, ஆனைக்குன்றிமணி, ஆற்றுபுரசு, சிசு இது மாதிரியான மிகவும் அரிதான வகை கன்றுகளை மிகவும் சிரமப்பட்டு விதைகளை சேகரித்து அவற்றை தன்னோட இடத்துல கொண்டுவந்து நர்சரியில் அவற்றை பதியம் போட்டு, கன்றாக வளர்த்து எடுத்து அதை கொண்டு சென்று முக்கியமான இடங்களில் நடவு செய்து அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வருகிறார் மரம் ராஜா.

இதையும் படிங்க:  செவிவழிச் செய்தி மூலம் நூற்றாண்டுகள் பழமையான சிவாலயத்தை கண்டறிந்து புணரமைத்த புதுகை மக்கள்

இவருடைய சேவைக்கு இவர் யாரிடமிருந்தும் எந்த பிரதி பலனும், உதவியையும் கூட எதிர்பார்க்கவில்லை. அரசும், பொதுமக்களும் இந்த கன்றுகளை வளர்த்து மரமாக்க உதவி செய்தால் போதும், அதுதான் மற்றவர்கள் தனக்கு செய்யும் கைமாறு என்று புன்னகையுடன் சொல்கிறார் மரம் ராஜா.

மரம் ராஜா


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவரே ஒரு மரம் என்ற அமைப்பையும் உருவாக்கி புதுக்கோட்டை நகரில் பலரையும் ஒருங்கிணைத்து இதுபோன்ற இயற்கை ஆர்வலர் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வருமானம் பெரிதாக இல்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தன்னால் இயன்றதை செய்துவிட்டுப் போகணும்னு வாழ்நாளில் பாதிக்கும் மேல் அர்ப்பணித்து தன்னுடைய வருமானத்தில் நாளில் பாதிப் பகுதியை சுற்றுச்சூழலுக்காக செலவு செய்யும் அந்த மனது தான் அவரை உயர்ந்தவராக நம்மை பார்க்க வைக்கிறது.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி