முகப்பு /புதுக்கோட்டை /

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

X
திருவப்பூர்

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா

Pudukkottai News | புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து தேரோட்டத்தின் கடைசி நிகழ்வாக பக்தர்கள் முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை நகர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி திருவப்பூர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அப்போது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Pudukkottai