Home /pudukkottai /

புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வம்.. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலின் சிறப்புகள்..

புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வம்.. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலின் சிறப்புகள்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் கோவில்

Pudukkottai Pragathaambal Temple | பல பெருமைகளைச் சுமந்து நிற்கும் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வமாக இருந்த அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோவில் இன்றும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்கி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வமாக விளங்கிய பிரகதாம்பாள் கோவிலின் சிறப்புகள் குறித்த அறிந்து கொள்வோம்.

நம் பாரத தேசம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்குப் பிறகும் சில காலம் தனி சமஸ்தானமாக புதுக்கோட்டை பூமியானது, தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இது போன்றதொரு பெருமை பெற்ற சமஸ்தானங்கள் வெகு சிலவே..

இப்படி பல பெருமைகளைச் சுமந்து நிற்கும் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் இஷ்ட தெய்வமாக இருந்த அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோவில் இன்றும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வழங்கி வருகிறது.

புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் கோவில்


குடைவரைக் கோவில்:

அடிப்படையில் இது ஒரு குடைவரைக் கோவிலாகும்,. இத்திருக்கோயில் உருவான காலம் கி. பி. 600 முதல் 630க்குள் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இக்கோவிலின் கோகர்ணேஸ்வரர் கருவறை மலைச்சரிவில் செதுக்கப்பட்டிருக்கிறது. கருவறையில் மையத்தில் சிவலிங்கம் வடிவமைக்கப்படிருக்கிறது. கருவறையின் முன்னே உள்ள மண்டபம் நான்கு தூண்களால் தாங்கி நிற்கும் வடிவத்தில் குடைந்து எடுத்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் கோவில்


கோவிலில் காணப்படும் சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்களின் கலைப்பணியை ஒத்து இருப்பதாகக் கூறப்படுகிற போதிலும் கருவறையை உள்ளடக்கிய மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் 11ம் நூற்றாண்டு சோழர் காலத்து கட்டமைப்பு என நம்பப்படுகிறது.

சிற்ப வேலைபாடுகளால் மிளிரும் கோவில்

எந்தக் கோவிலிலும் கண்டிடாத சிறப்பாக இக்கோவிலில் உள்ள மாடி போன்ற அமைப்பிலும் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.
இக்கோவிலில் தினந்தோறும் திருவிழா நடக்கும் என்ற வரலாறு கடத்தப்பட்டு வந்திருந்தாலும் சமீப காலத்தில் மாதந்தோறும் திருவிழா நடந்தது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
காலப் போக்கில் இந்த நிலை மாறி தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு திருவிழா நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் கோவில்


தல வரலாறு - கபில தீர்த்தம்:

இக்கோவிலின் தல வரலாறாக, தேவர்களின் பசுவான காமதேனு சாபம் பெற்று பூமியில் பசுவாகவே பிறந்ததாகவும், சாபம் நீங்க மகிழம் மரம் நிறைந்த காட்டில் இருக்கும் இந்த திருத்தலத்திற்கு தினந்தோறும் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகங்கள் செய்து வழிபட்டு சாப விமோச்சனம் பெற்றதாகவும் அப்போது மீதம் இருந்த கங்கை நீரை கொம்புகளால் கீறி ஏற்பட்ட பள்ளத்தில் சேமித்ததாகவும் வரலாறு. இந்த பள்ளத்தில் சேமித்த நீர் தான் இன்று கபில தீர்த்தம் என கோவிலில் இருக்கும் தீர்த்தமாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோவில் அமைவிடம்:

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இந்த திருத்தலம் புதுக்கோட்டை நகரின் எல்லைப் பகுதியில் திருக்கோகர்ணம் எனும் ஊரில் புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோகர்ணம் வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணித்து திருக்கோவிலை அடையலாம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி