முகப்பு /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23) மின் தடை பகுதிகள் இவை தான்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23) மின் தடை பகுதிகள் இவை தான்.!

புதுக்கோட்டை  மின்தடை

புதுக்கோட்டை மின்தடை

Pudukkotttai Power Cut | புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 23-ந்தேதி (வெள்ளிக் கிழமை)   மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 23-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப் பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் எவை என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read :ஒதுங்க இடமில்லாமல் திண்டாடும் பயணிகள்.. ஆலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இப்படி ஒரு அவலமா

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று தகவலைஉதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை செய்யப்படும் இடங்கள்: ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாலை சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி, கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வெள்ளாள விடுதி, சங்கம்பட்டி

First published:

Tags: Local News, Pudukkottai