ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் கஜா புயலில் சேதமடைந்த தெருவிளக்குகள்... இன்று வரை சீரமைக்கப்படாத அவலம்... 

புதுக்கோட்டையில் கஜா புயலில் சேதமடைந்த தெருவிளக்குகள்... இன்று வரை சீரமைக்கப்படாத அவலம்... 

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னம்பாடி கிராமத்தில் சேதமடைந்த  தெருவிளக்குகள் இன்னும் சரி செய்யப்படாததால் இரவில் கிராம மக்கள் அவதி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னம்பாடி கிராமத்தில் 600 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் பேருந்து நிலையத்தின் அருகில் 2006ம் ஆண்டில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது இந்த விளக்குகள் சேதம் அடைந்தது.

புயலின் தாண்டவம் முடிந்து 4 வருடங்கள் ஆகியும் இன்னும் இந்த பகுதியில் பழுதடைந்த தெருவிளக்குகள் மீண்டும் சரி செய்யப்படவில்லை. பேருந்து நிலையத்தில் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் பேருந்துகள் வந்து செல்கின்றன.

பெண்கள் முதல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை அனைவரும் இந்த பேருந்து நிலையத்தை தினந்தோறும் பயன்படுத்துகின்றனர். அதில் இரவு ஒன்பதரை மணிக்கு வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்களும் உள்ளனர்.

இதையும் படிங்க : புதுக்கோட்டை மக்கள் கவனத்திற்கு.. உங்கள் செல்போனில் இந்த நம்பர்கள் இருக்கா?

இந்நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே தெரு விளக்குகள் சரி செய்யப்படாமல் இருப்பதால் அனைவரது பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் இந்த பேருந்து நிலையத்தை கடந்து பத்திரமாக வீட்டிற்கு செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர்.

இதுதொடர்பாக இந்த பகுதியில் உள்ள பெண்கள் தெரிவிக்கையில், “நாங்க இரவு வரும் போது ஒரே இருட்டா இருக்கும், பாம்பு போன்ற விஷ ஜீவராசிகள் பயம் ஒரு பக்கம் என்றால் இந்த குடிகாரர்கள் பயம் வேற. வேலை இரவு 9:30 மணிக்கு தான் முடியும் அப்புறம் தான் வர முடியும் ஆனா இந்த தெருவிளக்குகள் இல்லாததால் ரொம்ப பயமா இருக்கு.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாங்க ஒன்னு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கல இருந்த இடத்துல திரும்ப தெரு விளக்குகள் மட்டும் மீண்டும் சரிசெய்து கொடுங்க ” என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர் : சினேகா - புதுக்கோட்டை

First published:

Tags: Local News, Pudukkottai