வாசனை பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களில் மிளகும் ஒன்று. இந்த மிளகு குளிர்ச்சி மிகுந்த மலைப் பகுதியில் மட்டுமே சாகுபடி செய்யப்படும். தற்போது வறட்சி நிறைந்த பகுதியான புதுக்கோட்டையில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் முத்துலட்சுமி தம்பதியினர் 15 வருடங்களுக்கு மேலாக மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் இயற்கை முறையில் மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை இந்த மிளகு சாகுபடி ஆனது செய்யப்படுகிறது. 300 முதல் 400 கிலோ வரை மிளகு கிடைக்கிறது. இயற்கை முறையில் நேரடியாக சூரிய ஒளியில் காய வைப்பதனால் இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகுகள் அதிக காரத்துடனும் சுத்தமான தரத்துடனும் இருப்பதாக தெரிவிக்கின்றனர். 1 கிலோ மிளகு 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் மிளகை கொரியர் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய முத்துலட்சுமி, நாங்கள் முதலாக இந்த மிளகு செடியை ஒன்றை மட்டும் வைத்து பார்த்தோம். அதன் பின் அது நன்கு செழித்து வளரவே பின்னர் பலாதோப்பில் இந்த மிளகு செடியை வைத்தோம். அதன் பின் பலா சாகுபடி பாதிக்கப்பட்டது. பின்னர் ஆலோசனைகள் கேட்டு தென்னந்தோப்பில் மேலும் கிளுவை , வாதநாராயணன்,கிளேசியா போன்ற மரச்செடிகளில் மிளகு செடிகளை நடவு செய்தோம். பின்னர் நன்கு செழித்து வளர ஆரம்பித்துவிட்டது.
இதற்கு மீன் அமிலம் ஜீவாமிர்தம் அடி உரமாக இயற்கை வேளாண்மை கழிவுகள் மட்டுமே பயன்படுத்துகின்றோம். ஊடுபயிராக இதனை வளர்ப்பதனால் அதிக அளவில் செலவுகள் இருக்காது. இதற்கு நோய்கள் தாக்கங்கள் அதிகம் இருக்காது. நாங்கள் மிளகாய் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்றோம். தனித்தனியாக செடிகளை வைக்காமல் முதலில் பதியம் போடுதல் முறையில் செடிகளை நட்டு அதன் பின்னர் அதனை எடுத்து ஒவ்வொரு மரக்கன்று அடியிலும் வைத்து இதனை வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் மலை பிரதேசங்களில் வளரக்கூடியது தான் இந்த மிளகுசெடிகள் ஆனால் அவை தற்போது சமவெளிகளில் செழித்து வளருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Pudukkottai