ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டை மலையடிப்பட்டி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு..!

புதுக்கோட்டை மலையடிப்பட்டி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு..!

X
ராஜ

ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள் 

Pudukkottai News: பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட வாசல் திறக்கும் வைபவம் ஒவ்வொரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மலையடிப்பட்டி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படும். மது, கைடபர்கள், ஆகிய அசுரர்கள் பகவான் விஷ்ணுவோடு யுத்தம் செய்து முடிவில் அவரின் பராக்கிரமத்தை அறிந்து அவரை சரணடைந்து தங்களுக்கு வைகுண்ட பதவி வேண்டும் என்று கேட்டனர். விஷ்ணுவும் மகிழ்ந்து சொர்க்க வாசலை திறந்து அவர்களையும் வைகுண்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

அப்பொழுது வைகுண்டம் அடைந்த அசுரர்கள், ”பகவானே மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியான இந்த நாளில் எங்களுக்கு சொர்க்கவாசலை திறந்து அருளியது போன்று யாரெல்லாம் தங்களின் ஆலயத்திற்கு வந்து உங்களை வணங்குகிறார்களோ, அவர்களுக்கும் சொர்க்க வாசலை திறந்து வைகுண்ட பதவியை அருள வேண்டும்” என வேண்டிக் கொண்டனர்.

மகாவிஷ்ணுவும் ”அவ்வாறே ஆகட்டும்” என்று வரம் தந்தார். அதன் சாட்சியாகவே இன்றும் பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட வாசல் திறக்கும் வைபவம் ஒவ்வொரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று நடைபெறுகிறது. இந்த நாளில் சொர்க்கவாசல் வழியாக நுழைந்து சென்று பெருமாளை அதாவது வைகுண்ட வாசனை கண்டு தரிசனம் செய்தால் மோட்சம் நிச்சயம் என்பது ஐதீகம்.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் அந்த வாசலின் வழியாக கோவிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டனர்.

அதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 3 மணி முதலே பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சேவை , அலங்காரம், ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை கண்டு கோவிந்தா , பெருமாளே , பரம்பொருளே என கோசங்களை எழுப்பி பெருமாளை வழிப்பட்டனர்.அதன் பின் பெருமாள் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதன் பின் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பக்தர்கள் ஒன்று திரண்டு விழாவை கண்டு ஆசி பெற்று சென்றனர்

First published:

Tags: Pudukkottai, Tamil News, Vaikunda ekadasi