முகப்பு /புதுக்கோட்டை /

10 ஆண்டுக்கு பின் விராலிமலையில் நடந்த மீன்பிடித் திருவிழா- மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

10 ஆண்டுக்கு பின் விராலிமலையில் நடந்த மீன்பிடித் திருவிழா- மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்

X
மீன்பிடித்

மீன்பிடித் திருவிழா

Viralimalai Fish Festival | விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viralimalai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள மேலபச்சகுடி கிராமத்தில் மீன்பிடித் திருவிழா ஆரவாரத்துடன் நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அதிகாலை முதலே காத்திருந்து மீன்களை அள்ளிச் சென்றனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர்பங்கேற்று பல வகையான மீன்களை அள்ளிச் சென்றனர்.

விராலிமலை அருகே உள்ள மேலபச்சகுடி கிராமத்தில் நேற்று காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அருகாமையில் உள்ள 10 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து இருசக்கர வாகனம், லோடு ஆட்டோக்களில் குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என அதிகாலையிலேயே கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பெரியகுளம் கரையில் திரண்டனர்.

மீன் பிடிக்கும் மக்கள்

இதில் முதலில் ஊர் முக்கியஸ்தர் ராமசாமி வலையை வீசியதை தொடர்ந்து குளக்கரையில் காத்திருந்த மக்கள், தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, கூடை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் உடன் குளத்திற்குள் இறங்கி போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர்.

குளத்தில் நீர் வற்றி இருந்ததால் வலையில் விரால், கெளுத்தி, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு மீன்கள் சிக்கின. பிடித்த மீன்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு பனியிலும் மீன் பிடிக்க வந்தது வீண் போகவில்லை என்று மக்கள் பேசிக்கொண்டே மகிழ்ச்சியுடன் வீடுகளுக்குச் சென்றனர்.

பஞ்சகவ்யம் செய்வது இத்தனை சுலபமா? இயற்கை விவசாயத்துக்கு புதுக்கோட்டை விவசாய தம்பதியர் சொல்லும் வழிமுறை.!

கடந்த ஆண்டு மழை பொய்த்துப் போனதால் பெரும்பாலான குளங்கள் நீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா விராலிமலையில் ஒரு சில ஊர் குளங்களில் மட்டுமே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Local News, Pudukkottai