ஹோம் /புதுக்கோட்டை /

மீன்வளத்துறையின் அறிவிப்பை ஏற்று கடலுக்கு செல்லாத கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்..

மீன்வளத்துறையின் அறிவிப்பை ஏற்று கடலுக்கு செல்லாத கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள்..

கடலுக்கு செல்லவில்லை

கடலுக்கு செல்லவில்லை

Pudukkottai District | புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இதையடுத்து விசைப்படகுகளில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும். இதனால், 8ஆம் தேதி (நாளை) மாலை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை நிலை குறித்து சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் இறையன்பு உடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் (புதன்கிழமை) மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

மீறி கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் விசைப்படகு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்று மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Fishermen, Local News, Pudukkottai