புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரூபாய் 4.38 லட்சம் மதிப்பிலான காய்கறி மற்றும் கனிகள் விற்பனை வண்டி மற்றும் பனை மரம் ஏறுவதற்கு அறுவடை செய்வதற்குஉபகரணங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.
பனை மரத்தின் வேர் முதல் நுனி வரை இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் ஆகியவை மனிதனுக்குபயன்படுகிறது மண்ணரிப்பை தடுக்க பெரிதும் உதவுகிறது மேலும் கைவினைப் பொருட்கள், நுங்கு, பதநீர் போன்ற சத்தான பானங்கள், பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி போன்றவைகளும் பனை மரத்திலிருந்து பெறப்படுகிறது. பனை மரத்தின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை மூலமாக பனை மரங்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள், 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பனையேறும் விவசாய தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பனங்காய்களை அறுவடை செய்வதற்கும், பனைமரம் ஏறுவதற்கும் உகந்த உபகரணங்களையும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் காய்கறிகள் மற்றும் கனிகள் விற்பனை செய்யும் நபர்களுக்கு நகரும் காய்கறி மற்றும் கனிகள் விற்பனை வண்டியும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai