ஹோம் /புதுக்கோட்டை /

சினிமாவில் பல விருதுகளை அள்ளிய தம்பி ராமையாவின் பூர்வீக ஊர் இது தானா?... அட இது தெரியாம போச்சே..

சினிமாவில் பல விருதுகளை அள்ளிய தம்பி ராமையாவின் பூர்வீக ஊர் இது தானா?... அட இது தெரியாம போச்சே..

தம்பி ராமையா

தம்பி ராமையா

Thambi Ramaiah | பிரபல நடிகர் தம்பி ராமையா திரைப்பட இயக்குனர், பாடலாசியர், வசனகர்த்தா, நகைச்சுவை நடிகர் என பன்முக திறமையுடன் கலக்கி வருபவர். இவரின் சொந்த மாவட்டம், பூர்வீக ஊர் எது என்று தெரிந்துகொள்வோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

தம்பி ராமையா திரைப்பட இயக்குனர், பாடலாசியர், வசனகர்த்தா, நகைச்சுவை நடிகர் என பன்முக திறமையுடன் அசத்தி வருகிறார். இவரின் நடிப்பு பலரையும் திரும்பி பார்க்க வைத்து, வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

இவர், கும்கி, மைனா, தலைவா, சாட்டை, வீரம், தனி ஒருவன், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் ஏற்று நடிக்கும் கதா பாத்திரங்களில் உணர்வுப்பூர்மாக பார்வையாளர்களை கவந்திழுப்பதில் வல்லவர். மைனா திரைப்படத்தில் நடிப்பில் மூலம் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதேபோல பல்வேறு விருதுகளைப் பெற்று சினிமாவில் வலம் வருகிறார்.

தம்பி ராமையாவின் பெற்றோர் ஜகன்னாத பிள்ளை, பாப்பம்மாள் ஆவர். இவரின் மனைவி பொன்னழகு இவர்களுக்கு மகன் உமாபதி, மகள் விவேகா ஆகியோர் உள்ளனர்.

தம்பி ராமையாவின் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி செல்லும் வழியில் நச்சாந்துபட்டி அருகே உள்ள ராராபுரம். இது பொன்னமராவதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது. இவர் சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவருக்கு சினிமா மீது ஈர்ப்பு பற்றிக்கொண்டது. பிறகு தனது திரைப்பட கனவை நோக்கி சென்னைக்கு நகர்ந்தார்.

தம்பி ராமையா

இந்நிலையில், தனது திறமைகளால், உதவி இயக்குனர், பாடலாசியர், வசனகர்த்தா, துணை நடிகர், நகைச்சுவை நடிகர் நாளுக்கு நாள் வளர்ந்து ஜொலித்து வருகிறார். மேலும், இயக்குனராகவும் பட்டையை கிளப்பி வருகிறார்.

Must Read : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

இவர், கடந்த 2010ஆம் ஆண்டில் வெளியான ஒரு கூடை முத்தம் படத்தில் இடம்பெற்ற, “நோகல எனக்கு , “பாப்பா பிறந்தது” ஆகிய பாடல்களை எழுதியுள்ளார்.

தம்பி ராமையா

தம்பி ராமையா தான் வீட்டில் முதல் பிள்ளை. இவருடன் சேர்த்து 5 பேர். கிராமத்தில் திருவிழா மற்றும் உறவினர் வீட்டு விஷேசங்களின் போது, கிராமத்தில் இவர் கட்டியுள்ள வீட்டிற்கு வருவது தம்பி ராமையாவின் வழக்கம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவருக்கு, சேதுபதி (தம்பி), அம்பிகாவதி (தம்பி), அஞ்சல தேவி (தங்கை), குமார் (தம்பி) ஆகியோர் உடன் பிறந்துள்ளனர். இதில், சேதுபதி, குமார் மட்டும் ராராபுரத்தில் வசிக்கின்றனர். அம்பிகாவதி வெளிநாட்டில் வேலை பார்கிறார். தங்கையும் வெளியூரில் இருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நடிகர் தம்பி ராமையா நம்ம புதுக்கோட்டையை பூர்வீமாக கொண்டவர்தாங்க.

Published by:Suresh V
First published:

Tags: Actor, Local News, Pudukkottai