முகப்பு /புதுக்கோட்டை /

கொடியேற்றத்துடன் களைகட்டியது தைப்பூச திருவிழா.. விழாக்கோலம் பூண்டது விராலிமலை முருகன் கோயில்!

கொடியேற்றத்துடன் களைகட்டியது தைப்பூச திருவிழா.. விழாக்கோலம் பூண்டது விராலிமலை முருகன் கோயில்!

X
விராலிமலை

விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேறியது..

Viralimalai Murugan Temple thaipoosam 2023 | விராலிமலை முருகன் மலை கோவிலில் தைப்பூச கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viralimalai | Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவில் தைப்பூச திருநாள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச திருநாளின் முதல் நிகழ்வாக மலைக்கோவிலில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கொடியேற்றத்திற்கு முன்பாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதன் பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து தைப்பூச திருநாளன்று ஆண்டுதோறும் தேர் திருவிழா பிரமாண்டமாக நடைபெறும். அதில் புதுக்கோட்டை மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும், இப்பகுதியைசுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இந்த தேரோட்டத்தின் முதல் நிகழ்வாக கொடியேற்றம் நடைபெறும் இந்த கொடியேற்ற நாள் முதல் தைப்பூச தேர் திருவிழா வரை தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சுவாமி ஊர்வலங்கள் நடைபெறும். அதன் பின் தெப்ப திருவிழா நடைபெற்று அடுத்த நாள் விராலிமலை அருகில் உள்ள விராலூருக்கு முருகன் வெள்ளி குதிரையிலும் வள்ளி தெய்வானை கேடயத்திலும் அமர்ந்து சென்று பெருமாளைக் கண்டு வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதில் ஒரு பகுதியாகவும் முதல் நிகழ்வாகவும் இந்த கொடியேற்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொடியேற்ற விழாவை கண்டு முருகனின் ஆசி பெற்று சென்றனர்.

First published:

Tags: Local News, Murugan temple, Thaipusam, Viralimalai Constituency