முகப்பு /புதுக்கோட்டை /

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேர் திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் வடம் பிடித்தனர்..

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேர் திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் வடம் பிடித்தனர்..

X
பக்தர்கள்

பக்தர்கள் கூட்டத்தின் நடுவே பவனி வந்த தேர் 

Chariot Festival : விராலிமலை முருகன் மலைக்கோயில் தைப்பூச விழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு சுவாமி வீதி உலா நிகழ்ச்சி காலை, மாலை என இருவேளையும் நடைபெற்றது. இதில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் நாக வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பல்லக்கு கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை மலைக்கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி தெய்வானை சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மீது வீற்றிருக்கும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது. தொடர்ந்து அதிகாலையில் இருந்து வள்ளி தெய்வானை சமேதராக கீழே இறங்கி வந்த முருகன் தேரில் எழுந்தருளினார்.

இதனைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்று தேர் வடம் பிடித்தனர். சிறிய தேரில் எழுந்தருளிய விநாயகர் முன்னே செல்ல பெரிய தேரில் எழுந்தருளிய முருகனார் தேர் பின்னால் வந்தது. முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர் முன்னால் சிறுவர்கள், இளைஞர்கள் நடனம் ஆடியபடி சென்றனர்.

விழாவையொட்டி பக்தர்கள் சார்பில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Pudukkottai