ஹோம் /புதுக்கோட்டை /

25 ஆண்டுகளுக்கு பின் புதுப்பொலிவு பெரும் விராலிமலை தேர்.. 

25 ஆண்டுகளுக்கு பின் புதுப்பொலிவு பெரும் விராலிமலை தேர்.. 

X
விராலிமலை

விராலிமலை தேர்

Pudukkottai News : விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம் விமர்சையாக கொண்டாடப்படும் அதையொட்டி முருகன் மலையை சுற்றி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க தேர் தயாராகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viralimalai, India

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம் விமர்சையாக கொண்டாடப்படும் அதையொட்டி முருகன் மலையை சுற்றி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க தேர் தயாராகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் தைப்பூச தினத்தன்று வெகு விமர்சையாக தேர் திருவிழா நடைபெறும். இந்தத் தேர் திருவிழாவானது 11 நாள் நடைபெறும். எட்டாம் திருநாள் அன்று தேர் ஊர்வலம் நடைபெறும். அப்போது விராலி மலையில் இருந்து முருகன் மற்றும் வள்ளி தெய்வானை விராலூர் சீனிவாச பெருமாளிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இந்த சிறப்பு ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து முருகன் வெள்ளி குதிரையில் வள்ளி தெய்வானை கேடயத்திலும் அமர்ந்து மலையை சுற்றி வரும் விழா நடைபெறும். அதன் பின்னர் தேர் திருவிழா நடைபெறும்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வர். மேலும் இந்த விராலிமலை தேர் திருவிழாவானது சுற்றி உள்ள 48 பஞ்சாயத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய விழாவாக சிறப்பாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடி இந்த தைப்பூச தேர் திருவிழாவை கொண்டாடி வருவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு.

இதையும் படிங்க : மண்ணில் புதைந்த நகரம் தனுஷ்கோடி.. புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்து இன்று 58-வது ஆண்டு

மேலும் தைப்பூசத் திருநாளன்று முருகப் பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்படும். அதை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வெகு தொலைவில் இருந்தும் வருவர்.. இதனை அடுத்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழாவுக்கு தேர் செப்பூட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தேர் செதுக்கும் சிற்பிகள் மரக்கட்டைகள் மூலம் நுணுக்கமான முறையில் விராலிமலை முருகன் கோவில் தேரில் பல்வேறு சிலைகள் செதுக்கி அழகாக தயார்படுத்தி வருகின்றனர். சிலைகளில் முக்கியமாக முருகன்  பார்வதி தேவி,  சிவன், மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களும் மிக அழகாக செதுக்கப்பட்டு வருகின்றது.

செய்தியாளர் - சினேகா விஜயன் (புதுக்கோட்டை)

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

First published:

Tags: Local News, Pudukkottai, Tamil News