Home /pudukkottai /

இன்னும் வரி செலுத்தவில்லையா...? - புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

இன்னும் வரி செலுத்தவில்லையா...? - புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

PUDUKOTTAI : புதுக்கோட்டை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் வணிகவளாகங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சியில் ஆண்டுக்கு இரண்டு முறையாக அரையாண்டு வீதம் வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு வரை சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு செலுத்த வேண்டிய தொகை என 10 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திங்கள்தோறும் களைகட்டும் ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார கிராமங்களின் ஏலக்கடைகள்...


எனவே, மேற்காணும் நிலுவை தொகையை நகராட்சி நிதிநிலைமையை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பணிமேற்கொள்ளவும் வருகிற 30ஆம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Pudukottai

அடுத்த செய்தி