முகப்பு /புதுக்கோட்டை /

Pudukkottai Weather Update : காற்றுடன் பெய்த கனமழை.. கந்தர்வகோட்டை அருகே சாலையின் குறுக்கே விழுந்த வாகை மரம்!

Pudukkottai Weather Update : காற்றுடன் பெய்த கனமழை.. கந்தர்வகோட்டை அருகே சாலையின் குறுக்கே விழுந்த வாகை மரம்!

X
சாலையில்

சாலையில் விழுந்த மரம்

Pudukkottai Weather Update : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மழையினால் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான வாகை மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதித்தது.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் சாலை ஓரங்களில் இருபுறமும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பரந்து விரிந்துள்ள வாகை மரங்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே லேசான முதல் கன மழை பெய்து வருகிறது.

சாலையில் விழுந்த மரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கன மழையினால் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான வகை மரம் ஒன்று சாலையில் குறுக்கே வேரோடு சாய்ந்தது. இதனால், கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு மீட்பு பணி துறையினர் மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு அப்புறப்படுத்தினர்.

இதனால் கந்தர்வகோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டை தஞ்சாவூர் புதுக்கோட்டை திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Pudukkottai, Weather News in Tamil