முகப்பு /புதுக்கோட்டை /

என்னமா இங்கிலீஷ் பேசுறாங்க.. டங்க் ட்விஸ்ட்டரில் அசத்தும் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்! 

என்னமா இங்கிலீஷ் பேசுறாங்க.. டங்க் ட்விஸ்ட்டரில் அசத்தும் புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள்! 

X
டங்க்

டங்க் ட்விஸ்ட்டரில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

Government Schools in Pudukottai : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதுடன், ஆங்கில சொற்களை டங் ட்விஸ்ட்டர் முறையில் தெள்ளத் தெளிவாக பேசி அசத்தியும் வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2012-13ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 2020-21ம் கல்வி ஆண்டு வரை 9 ஆண்டுகளாக 100% மாணவர்கள் தேர்ச்சியை பெற்றுள்ளது.

குறிப்பாக ஆங்கில பாடத்தில் 2021-2022ம் கல்வி ஆண்டிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் அளவில் ஆங்கிலத்தில் பேசி அசத்தி வருகின்றனர்.

மேலும், அதோடு மட்டுமின்றி கடினமான ஆங்கில சொற்களை டங்க் ட்விஸ்ட்டர் முறையில் தெள்ளத் தெளிவாக சொல்லும் திறனை பெற்று தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் பேசி வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக டைய்ட்டஸ் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வரக்கூடிய நிலையில், அவர் சிறந்த முறையில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதால் கடினமான வாக்கியங்களை கூட எளிமையாக உச்சரித்து அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அசத்தி வருவதாக கூறுகின்றனர்.

மேலும், இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் ஆங்கிலத்தில் உள்ள கடினமான வார்த்தைகள் மற்றும் ம் மிகவும் வேகமாகவும் துல்லியமாகவும் சொல்லி அனைவரையும் வியக்க வைக்கின்றனர். அரசுபள்ளியில் சேர்த்தால் நமது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவார்களா? என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு இந்த அரசுப் பள்ளியானது, தனியார் பள்ளி மாணவர்களை விட ஆங்கிலத்தில் சிறப்பாக பேச வைக்கும் பொக்கிஷமாக திகழ்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடமைக்கு பணி செய்யாமல் திருமணஞ்சேரி உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் டைய்ட்டஸை போல் மாணவர்களுக்கு தனிகவனம் செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி ஆசிரியர்கள் அவர்கள் சார்ந்துள்ள பாடங்களுக்கு நல்ல முறையில் பயிற்சி கொடுத்தால் வரக்கூடிய காலங்களில்அரசுபள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதுடன் நாட்டிலேயே சிறந்த பள்ளி அரசு பள்ளி தான் என்று போற்றப்படும் வகையில் மாறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    First published:

    Tags: Local News, Pudukkottai