முகப்பு /புதுக்கோட்டை /

மிஸ் இந்த ஆக்டிவிட்டி செய்யலாமா? எண்ணும் எழுத்தும் திட்டத்தில் புதுக்கோட்டை மாணவர்கள் ஆர்வம்

மிஸ் இந்த ஆக்டிவிட்டி செய்யலாமா? எண்ணும் எழுத்தும் திட்டத்தில் புதுக்கோட்டை மாணவர்கள் ஆர்வம்

X
எண்ணும்

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் புதுக்கோட்டை மாணவர்கள் ஆர்வம்

Pudukkottai News | புதுக்கோட்டை மாணவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் திறனை அதிகரிப்பதற்காக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல் திறனும், எழுதும் திறனும் குறைந்துள்ளது. இதனை களைந்திடும் வகையில், ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு எழுத்துக்களை வாசித்தல், எழுதுதல், வாக்கியங்களை சரளமாக வாசித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக ஆசிரியர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கென தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக மாணவர்களுக்கும் பயிற்சி கையேடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி ஆசிரியை பவுலின் ஜெயராணி பேசியபோது, இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. மாணவர்களின் சிந்தனையை ஊக்குவிக்க பெரும் உதவியாக உள்ளது. மாணவர்கள் பாடத்தை மனப்பாடம் செய்து படித்து விடாமல் முழுமையாக புரிந்து கொண்டு படிக்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது.

இதையும் படிங்க : மதுரையில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!

top videos

    மாணவர்களே முழு ஆர்வத்துடன் மிஸ் இந்த ஆக்டிவிட்டி செய்யலாமா? என்று எங்களிடம் வந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் எளிமையான வழிகளில் குழந்தைகள் பாடங்களை கற்க இந்த திட்டம் பயன்படுகிறது என்று தெரிவித்தார்.

    First published:

    Tags: Local News, Pudukkottai