ஹோம் /புதுக்கோட்டை /

பிரதமர் மோடி முன்னிலையில் தமிழ்நாட்டின் அடையாளத்தை வெளிப்படுத்திய புதுக்கோட்டை மாணவர்கள்..

பிரதமர் மோடி முன்னிலையில் தமிழ்நாட்டின் அடையாளத்தை வெளிப்படுத்திய புதுக்கோட்டை மாணவர்கள்..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாணவர்கள்

Pudukkottai News : இந்திய பிரதமர் மோடி முன் தமிழ்நாட்டின் அடையாளத்தை வெளிப்படுத்திய புதுக்கோட்டை மாணவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹூப்ளி மாநகரத்தில் ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தேசிய இளைஞர் தினம் நடைபெற்றது. விழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் இருந்தும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் ஆயிரம் நாட்டு நல பணி திட்டம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் மாநிலத்தின் கலாச்சாரம், தேசிய ஒருமைப்பாடு போன்றவற்றை எடுத்துக் காட்டும் நிகழ்சிகள் நடைபெற்றன. இதில் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய புதுக்கோட்டை இளைஞர்கள், ”நேரு யுவகேந்திரா தொடர்பில் உள்ள இளைஞர் மன்றத்தின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் பொது சேவைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்வியல் மற்றும் திறனை மேம்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த ஜனவரி 12ம் தேதி கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் உள்ள தார்வாட் எனும் இடத்தில் நடைபெற்ற 26வது இளையோர் திருவிழாவில் கலந்து கொள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த நாங்கள் தேர்வு செய்யப்பட்டு நேரு யுவ கேந்திரா அலுவலகத்தின் மூலமாக சென்றோம். பல்வேறு நாட்டு நலப்பணி, பொது சேவைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இதன் மூலம் செய்து வந்தோம். அதிலிருந்து இளைஞர் தின விழாவில் கலந்து கொள்ள இந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்நிகழ்வில் தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் புதுக்கோட்டை சேர்ந்த இளைஞர்கள் தமிழக பாரம்பரிய உடை அணிந்து கம்பீர அணிவகுப்பு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளிலும் தமிழகத்தின் சார்பாக இவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பொது சேவை செய்யும் இளைஞர்களின் நட்பும் கிடைத்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Pudukkottai