ஹோம் /புதுக்கோட்டை /

குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி மாணவர்களால் பளிச்சிடும் பரம்பூர் கிராமம்..

குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி மாணவர்களால் பளிச்சிடும் பரம்பூர் கிராமம்..

X
நாட்டு

நாட்டு நலப்பணியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் 

Pudukkottai News : வேளாண்மை கல்லூரி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமை  பரம்பூர் கிராமம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படும் வரும் புதுக்கோட்டை மாவட்டத்தின் குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமை பரம்பூர் கிராமம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் நடத்தினர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புனித தலங்கள் மற்றும் பள்ளி வளாகத்தை குளங்களை தூய்மை செய்யும் பணி , பெண் பாதுகாப்பு மற்றும் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு, விவசாயிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் அதனை தொடர்ந்து மாணவர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெற்ற தூர்வாரும் பணியில் குளக்கரைகள் , புனித தலங்கள், பள்ளி வளாகங்களில் உள்ள தேவையற்ற புற்கள், முற்செடிகள் ஆகியவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அதன்பின்னர் பெண் கல்வி மற்றும் பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.

இதில் ”மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் அம்மா” என்று கூறி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்பின் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது அதில் மாணவர்கள் பாடல் பாடி நடனம் ஆடி தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர். இந்த நாட்டு நலத்திட்ட பணி முகாமில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Pudukkottai, Tamil News