ஹோம் /புதுக்கோட்டை /

”டீச்சர் போகாதீங்க“ஆசிரியை பணியிட மாறுதலை தடுக்க போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

”டீச்சர் போகாதீங்க“ஆசிரியை பணியிட மாறுதலை தடுக்க போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 

Pudhukottai Teacher transfer Student protes | திதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியர் மட்டும் உள்ளதால் மாணவிகளின் பிரச்னையை கூற முடியும் அவரும் பணி மாறுதல் செய்தால் மாணவிகள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி ஆசிரியை பணியிட மாறுதலை திரும்பப்பெறக்கூறி பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், எண்ணை ஊராட்சியில் உள்ள மெய்யகவுண்டம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் 204 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எட்டு ஆசிரியர்கள்  பணிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள் பணியிடம் இது நாள் வரை காலியாக உள்ளது.

இந்த நிலையில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியை லதா, மணமேல்குடி மாணவியர் விடுதிக்கு காப்பாளராக திடீர் மாறுதல் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை அறிந்த  மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஆசிரியர் லதா மாறுதலுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பேசிய மாணவர்கள், பொது தேர்வு நடக்க உள்ள இந்த நேரத்தில் கணிதப் பட்டதாரி ஆசிரியை மாற்றம் செய்தால் பள்ளியின் தேர்ச்சி மற்றும் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதிப்பு அடையும் என்றும், இப்பள்ளியில் 100 மாணவிகள் படிக்கும் நிலையில் இவர் ஒருவர் மட்டுமே பெண் ஆசிரியராக இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் மாணவிகளான நாங்கள் எங்களுக்கு ஏற்படும் உடல் உபாதை தொடர்பான எந்த ஒரு பிரச்சினைகளையும் பெண் ஆசிரியர் இருந்தால்தான் அவரிடம் எடுத்துக் கூறி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியை எங்களை தாயை போல  வழி நடத்தியவர் என நெகிழ்ச்சியாக கூறினர். இதனால் ஆசிரியர் லதாவின் பணியிட மாறுதலை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணியிட மாறுதலை மறுபரிசீலனை செய்து மீண்டும் இதே பள்ளியில் அவரை பணியமர்த்த வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து தாசில்தார் மற்றும் போலீசார் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் பணி மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியை மாவட்ட கல்வித்துறை இடம் அனுமதி பெற்று இப்பள்ளியில் தொடர முயற்சி மேற்கொள்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மூன்று மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.

புதுக்கோட்டை - சினேகா விஜயன்

First published:

Tags: Local News, Pudukottai