ஹோம் /புதுக்கோட்டை /

உரங்களை இப்படி விற்றால் கடும் நடவடிக்கை- புதுக்கோட்டையில் புகார் எண் அறிவிப்பு

உரங்களை இப்படி விற்றால் கடும் நடவடிக்கை- புதுக்கோட்டையில் புகார் எண் அறிவிப்பு

உரம்

உரம்

Pudukkottai District | உரங்களை விற்பனை செய்யும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், விதிமுறைகள் மீறப்பட்டால் புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண்களையும் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

உரங்களை விற்பனை செய்யும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், விதிமுறைகள் மீறப்பட்டால் கீழ் கண்ட தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 3248 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி 1289 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 845 மெட்ரிக் டன்கள், காம்ளக்ஸ் உரங்கள் 5323 மெட்ரிக் டன்கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 443 மெட்ரிக் டன்கள் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவும், ஒரே நபரு க்கு அதிக அளவு உரமும் வழங்கக் கூடாது. குறிப்பிட்ட விவசாயியின் பெயரில் அதிகபடியாக உர விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் இரத்து செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Must Read : மூலிகை கலந்த அருவியில் குளியல் போடனுமா உடனே தென்காசிக்கு சுற்றுலா போங்க!

உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்வதும் கூடாது. விவசாயம் மேற்கொள்ளாதவர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது.

திடீர் ஆய்வு செய்யும் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அல்லது மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Farmers, Local News, Pudukkottai