ஹோம் /புதுக்கோட்டை /

ஒரே நாளில் 24 பேருக்கு நாய்க்கடி.. விராலிமலையை கலங்கடிக்கும் தெரு நாய்கள்..

ஒரே நாளில் 24 பேருக்கு நாய்க்கடி.. விராலிமலையை கலங்கடிக்கும் தெரு நாய்கள்..

X
மருத்துவமனையில்

மருத்துவமனையில் கூடிய மக்கள்

Pudukkottai | புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் பெண்கள் என 24 பேரை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் பெண்கள் என 24 பேரை வெறிநாய் கடித்ததால் சாலையில் நடமாடவே பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

விராலிமலை-திருச்சி, மணப்பாறை சாலை மற்றும் அம்மன் கோயில் தெரு, முத்து நகர், சிதம்பரம் கார்டன், தெற்கு தெரு, சோதனை சாவடி, தேரடி தெரு உள்ளிட்ட குடியிருப்பு தெரு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகிறது.

இதனால் அவ்வழியில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அவ்வப்போது இந்த நாய்கள் கடித்து விடுகிறது. அதுவும் குறிப்பாக பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அதிகமாக கடித்து வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் சென்று வந்த சிறுவர்கள், பெண்கள், பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் என இருபத்து நான்கு பேரை தற்போது வெறிநாய் ஒன்று துரத்தி துரத்தி சென்று கடித்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் ஆங்காங்கே நடைபெற்ற இந்த சம்பவத்தால் நாய் கடிக்கு ஆளானவர்கள் விராலிமலை அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில பேரைத்தான் நாய் கடித்து இருக்கும் என்று எண்ணிய மருத்துவர்களுக்கு ஒரே நேரத்தில் 24 பேரையுமே நாய் கடித்து உள்ளது என்பதை கேட்டு அதிர்ந்தனர்.

ஒரு ரூபாய்க்கு முடி திருத்தம்.. சலூன் அறிவித்த அதிரடி ஆஃபர்... குவிந்த பொதுமக்கள்!

நாய்கடிக்கு ஆளானவர்களும் அவர்களது உறவினர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் திரண்டு நின்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

செய்தியாளர்: சினேகா விஜயன், புதுக்கோட்டை.

First published:

Tags: Local News, Pudukkottai