Home /pudukkottai /

முக்காலி மூலம் திருடனை கண்டறியும் கிராம மக்கள்.. புதுக்கோட்டையில் விநோதம்..

முக்காலி மூலம் திருடனை கண்டறியும் கிராம மக்கள்.. புதுக்கோட்டையில் விநோதம்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News | புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் திருட்டுகளை கண்டுபிடிக்க ஆலங்குடி, அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதி மக்கள் முக்காலியை நடக்க விட்டு திருடர்களை கண்டுபிடிக்கும் நடைமுறையை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai
திருடு போன பொருளைக் கண்டுபிடிக்க முக்காலியை நடக்கவிட்டு திருடர்களை கண்டுபிடிக்கும் புதுக்கோட்டை கிராம பகுதி மக்களின் நம்பிக்கை குறித்த சிறப்பு தொகுப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் உள்ள ஏராளமானவர்களின் குல தெய்வமான வனப்பகுதியில் உள்ள சன்னாசியார் கோயில் அப்பகுதி பொதுமக்களின் பங்களிப்போடு திருப்பணி செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்களும் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:  புதுக்கோட்டையில் வழக்கத்திற்கு முன்னதாகவே நிரம்பிய நீர்நிலைகள் - விவசாயிகள் கவலை கொள்வது ஏன்?

கும்பாபிஷேகம் நடந்து முடிந்த சில நாட்களில் கோயில் உண்டியல் பூட்டுகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதனால் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் கோயில் உண்டியலை உடைத்து திருடியவர்கள் மீண்டும் பணத்தை கோயிலில் வைப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் 2 மாதங்களாகியும் திருடப்பட்ட உண்டியல் பணம் திரும்ப கிடைக்கவில்லை. அதனால் இப்பகுதி மக்களின் பழைய நம்பிக்கை முறையில் முக்காலியை இயக்கி திருடனை கண்டுபிடிக்க முடிவெடுத்து முக்காலி இயக்கும் சிட்டங்காடு பூசாரி நடராஜன் ஆலோசனைப்படி காய்ந்த வாகை மரத்தில் புதிய முக்காலி செய்யப்பட்டு கோயிலில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:  பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கொடும்பாளூர் இதுதானா... புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலா தலம்

தொடர்ந்து காலை பூஜை அறையில் இருந்து முக்காலியை சிறுவர்கள் தொட்டுக் கொண்டிருக்க பூசாரி நடராஜன் மந்திரங்கள் சொல்ல அங்கிருந்து நகர்ந்த முக்காலி கோயிலுக்குள் கிடந்த உடைக்கப்பட்ட உண்டியல் வரை சென்று பின்னர் அங்கிருந்து வெளியே சென்றது. முக்காலி உதவியுடன் கோயில் உண்டியல் பணத்தை திருடியவர்களை கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பு இது போன்ற முக்காலியை இயக்கி திருடனை கண்டுபிடிக்கும் முறையை குளமங்கலத்தில் மீண்டும் செய்திருப்பதை காண ஏராளமான மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஏற்கனவே இரண்டு முறை இதே போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற போது இந்த முக்காலி மூலமாகவே திருடியவர்களை கண்டுபிடித்துள்ளதாகவும், தற்போதும் அதைப் போலவே திருடியவர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை முக்காலி சரியாக கண்டுபிடித்துவிடும் எனவும் தெரிவித்தனர் குளமங்கலம் கிராம மக்கள்
Published by:Arun
First published:

Tags: Local News, Pudukkottai

அடுத்த செய்தி