முகப்பு /செய்தி /புதுக்கோட்டை / எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் கைது!

மாதிரி படம்

மாதிரி படம்

Pudukkottai fisherman arrest | ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 170 விசைப்படகு மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 85 மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்

இதில் ஜெகதா பட்டினத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் விசைப்படையிலும் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மாலதி சிவகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகிலும் 30 நாட்டிகல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஜெகதாப்பட்டினம் ஒரு விசைப்படையும் கோட்டைப்பட்டினம் ஒரு விசைப்படகுடன் அதில் உள்ள 12 மீனவர்களையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் யாழ்ப்பாணம் மயிலட்டி கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்

top videos

    இதில் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மாலதி சிவகுமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சிவக்குமார், கலையரசன், லோகேஸ்வரன், சக்தி ஆகிய நான்கு மீனவர்கள் அனுமதி பெற்று சென்றனர்.

    First published:

    Tags: Fisher man, Local News, Pudukkottai