முகப்பு /புதுக்கோட்டை /

வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.. புதுகை மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஒத்திகை.. 

வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.. புதுகை மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஒத்திகை.. 

X
மாதிரி

மாதிரி படம்

Corona Virus | புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Pudukkottai, India

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக புதுகை அரசு மருத்துவமனையில் கொரோனா வந்தால் அணுக தேவையான மாதிரி புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்குப் பின் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்கும் சாதாரண வார்டு உள்ளிட்டவை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திடீரென தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை குறித்து வழிகாட்டுதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பேசியது, “புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளாக 29 லட்சத்து 77 ஆயிரத்து 26 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,630 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ராமேஸ்வரத்தில் உள்ள பாறைகள் தண்ணீரில் மிதக்க இதுதான் காரணம்..!

மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 23 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் 15 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், தயார்நிலையில் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும் 21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான முககவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழ்நிலையில் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Corona, Local News, Pudukkottai