புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 47 கி.மீ தொலைவில் இருக்கிறது கொடும்பாளூர் கிராம். 800களில் இந்த பகுதியை சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது கொடும்பாளூர் சிற்றரசு. சோழ பேரரசுக்கு விசுவாசமான தளபதிகளில் ஒருவராக படை நடத்தி வெற்றி வாகை சூடியவர்களாக போற்றப்படுபவர் கொடும்பாளூர் சிற்றரசர்கள்.
அவர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் சிற்றரசர் பூதி விக்ரமகேசரி. இவர்தான் பெற்ற வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக 818ல் சிவன்கோயில் ஒன்றை கட்டினார். தஞ்சை பெரிய கோயில் கட்ட இந்த கோயில் தான் முன்னோடி என செவிவழி செய்திகள் தெரிவிக்கின்றன. மூவர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயிலின் மூலவர் சிவன்.
3 மேற்கு நோக்கிய கோபுரங்கள் இந்த கோயிலில் இருந்துள்ளது. இவற்றில் 2 கோபுரங்கள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. கோயில்கள் கருவறையில் சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. அதேபோல் கோயில் வளாகத்தில் கிணறு ஒன்ரையும் காண முடிகிறது. இதிலிருந்து அருகில் உள்ள வேறு ஒரு சிவன் கோயிலுக்கு செல்ல ரகசிய சுரங்கப்பாதை இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோபுரத்தில் தேவகணங்கள் மற்றும் வெவ்வேறு இசை கருவிகளில் வாசிக்கும் வித்வான்கள் ஆகியோரின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டு காட்சியளிக்கறிது. அதேபோல் இந்த கோயிலின் மாதிரி அமைப்படியும் மிக அழகாக கோபுரத்தில் காண முடிகிறது. ஆரம்பகாலம் முதல் சோழர்கள் கட்டிடக்கலையில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரமாக இந்த கோயில் திகழ்கிறது.
கோயிலில் கிடைத்த சமஸ்கிருத கல்வெட்டுகள் 8ம் மற்றும் 10ம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவையாக இருப்பதாகவும், தென்னிந்தியாவின் அரசியல் சூழல், சோழர் மற்றும் இறருக்குவேலின் அரச வீடுகளுக்கு இடையிலான உறவைவிளக்கும் வகையில் அமைந்துள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai, Religion18