ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் அந்தோணியார் நினைவு நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து சிறப்பு திருப்பலி...

புதுக்கோட்டையில் அந்தோணியார் நினைவு நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து சிறப்பு திருப்பலி...

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Anthony's Memorial Day : புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் புனித வனத்து அந்தோனியார் நினைவு நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆண்டுதோறும் புனித வனத்து அந்தோணியாரின் நினைவு நாளையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சார்பாக புனித வனத்து அந்தோணியாருக்கு பொங்கலிட்டு இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இலுப்பூர் புனித அந்தோணியார் தேவாலயத்தில் புனித வனத்து அந்தோணியாருக்கு பொங்கலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர். தொடர்ந்து பங்கு ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில், பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ் பங்கேற்று திருப்பலி செய்தார். இதில் தண்ணீர், அரிசி, வெல்லம், கரும்பு, தேங்காய் இவற்றை கொண்டு படைக்கப்பட்ட பொங்கலை திருப்பலியில் காணிக்கையாக செலுத்தி இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தப்பட்டது. பின்னர் விழாவின் நிறைவாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் மக்கள் அனைவரும் பங்குத் தந்தையிடம் ஆசி பெற்று சென்றனர். இந்த விழாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் என திரளானோர் பங்கேற்று இறைவனை வழிபட்டனர்.

First published:

Tags: Local News, Pudukkottai