ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் ‘காலேஜ் பஜார்’.. சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு..

புதுக்கோட்டையில் ‘காலேஜ் பஜார்’.. சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் விற்பனைக்கு..

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

special college bazaar : புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் ”காலேஜ் பஜார்” என்ற சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை கல்லூரி மாணவிகளிடையே ஏற்படுத்தவும், பொருட்களின் விற்பனையை மேம்படுத்தவும் காலேஜ் பஜார் என்ற விற்பனை கண்காட்சி கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சி தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மேலும் கல்லூரி வளாகத்தில் காலேஜ் பஜார் நடைபெறுவது குறித்து ஆட்சியர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் என மொத்தம் 36 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்துகொண்டு தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இக்கண்காட்சியில் மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது, டி.எஸ்.எம்.எஸ் பணியாளர்கள், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Pudukkottai