புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 45 வருடங்களுக்கு மேலாக ஜோதிட கணிப்பில் ஈடுபட்டு வரும் ஜோதிடர் மாரி கண்ணனின் கணிப்பின்படி, “2023ம் ஆண்டிற்கான சனிப்பெயர்ச்சி பலன்கள். 2023ல் 4 முக்கிய ராசிகளில் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. வாக்கிய பஞ்சாங்கப்படி 29.03. 2023 புதன்கிழமை பகல் 12 : 51க்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். திருக்கணிதப்படி 17. 1.2023 அன்று பெயர்ச்சி அடைகிறார்.
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், குருபகவான் மீன ராசிகளில் இருந்து மேஷ ராசிக்கும், ராகு மீனத்திலிருந்து மேஷ ராசிக்கும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி அடைகிறார். வாழ்க்கை என்றாலே மாற்றம் நிகழத்தானே செய்யும். பலரின் வாழ்க்கையில் நன்மையும், தீமையும் என்ற பல்வேறு மாற்றங்களை தரப்போகிறது இந்த சனிப் பெயர்ச்சி.
இது சூரியனை சுற்றி ஏறக்குறைய 29.5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. பொதுவாக சனிப்பெயர்ச்சியை பல வகைகளாக பிரித்து பெயரிடப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் சனிப்பெயர்ச்சி மந்தன் என்றும் அழைக்கின்றனர். சனிப்பெயர்ச்சியை பொருத்தவரை ஆயுள்காலன், கர்ப்ப காலன், தொழில்காலம் என இத்தனை வகைகளில் பலன்கள் நடக்கவிருக்கிறது. சனிபகவான் ஒரு நீதிக் கூழாக விளங்குகிறார் தீய செயல்கள் ஈடுபவர்களுக்கு தண்டனை வழங்கும் நீதிபதியாக விளங்குகிறார்.
இந்தியாவை பொறுத்தவரை சனிப்பெயர்ச்சியில் திட்டங்கள் தீட்டப் பெற்றாலும் அதை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். விந்திய மலைகளை ஒட்டி உள்ள பகுதிகளில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட நேரிடும். பொருளாதார கட்டமைப்புகள் சிறப்பாக இருக்கும். நம்ம தேசங்களில் சில எல்லை பிரச்சனைகள் பதட்டங்கள் ஏற்படும். 2024க்கு பிறகு இந்தியாவிற்கு முன்னேற்றம் ஏற்படும். சில அச்சுறுத்தும் வைரஸ்கள் தோன்றினாலும் கட்டுப்படுத்தப்படும். தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்லும்,” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai