ஹோம் /புதுக்கோட்டை /

புதுக்கோட்டையில் சிறு தானிய திண்பண்ட கடைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

புதுக்கோட்டையில் சிறு தானிய திண்பண்ட கடைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு

சிறு தானிய திண்பண்ட கடை

சிறு தானிய திண்பண்ட கடை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  செயல்பட்டு வரும் சிறுதானிய தின்பண்டங்கள் கடை ஒன்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானிய தின்பண்டங்கள் கடை ஒன்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

இயற்கை விவசாயத்தின் நீட்சியாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, மூங்கில் அரிசி உள்ளிட்ட சிறு தானியங்களை விற்பனை செய்வதோடு, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்களாகவும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் மருதாணி மகளிர் சுய உதவிக்குழு பெண்கள்.

தினை, சாமை, வரகு மாவினால் தயாரிக்கப்படும் முறுக்கு, தட்டு வடை, தினை, சிவப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி மாவினால் தயாரிக்கப்படும் அதிரசம், திணை மற்றும் நவதானிய மாவினால் தயாரிக்கப்படும் லட்டு, கருப்பட்டி-தேங்காய் பர்பி, மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் காரப்பொரி என பார்த்தாலே எச்சில் ஊறும் தின்பண்டங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதையும் படிங்க : விராலிமலையில் சுகாதாரமற்ற பேருந்து நிறுத்தம்... அவதிப்படும் பயணிகள்...  

அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் சிறுதானியங்களில் செய்யமுடியும். வாயு தொல்லை ஏற்படுத்தும் கடலை மாவு, வனஸ்பதி, வெள்ளை சர்க்கரை கலந்துதான் லட்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் எங்கள் தின்பண்டங்களில் இந்த பொருட்களை பயன்படுத்துவதே இல்லை.

கடலை மாவுக்கு பதிலாக சிறுதானிய மாவு, வனஸ்பதிக்கு பதிலாக சுத்தமான நெய், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை என மக்களின் உடல் நலம் கருதி பார்த்துப்பார்த்து பயன்படுத்துகிறோம் என்கிறார் அதன் நிறுவனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் இங்கு பல வகையான கஞ்சிகள், கீரை சூப் வகைகள் ஆகியவற்றை மக்களுக்கு குறைந்த விலையில் அதாவது 10 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது. இந்த மருதாணி சுய உதவி குழு. சிறுதானிய பயன்பாட்டை மக்கள் மத்தியில் மீண்டும் கொண்டு வரும் இவர்களது முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விடைபெற்றோம்.

செய்தியாளர் : சினேகா - புதுக்கோட்டை

Published by:Karthi K
First published:

Tags: Local News, Pudukkottai