ஹோம் /புதுக்கோட்டை /

செங்கல் தயாரிப்பு பணியில் புதுக்கோட்டையின் சிங்கப்பெண்கள்..

செங்கல் தயாரிப்பு பணியில் புதுக்கோட்டையின் சிங்கப்பெண்கள்..

X
புதுக்கோட்டையின்

புதுக்கோட்டையின் சிங்கப்பெண்கள்

Pudukkottai Singa Pengal : செங்கல் தயாரிப்பு பணியில் புதுக்கோட்டையின் சிங்கப்பெண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஊராட்சி பூதக்குடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஊராட்சி பூதக்குடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் வாழ்வாதார இயக்க உதவியுடன் முத்துமாரியம்மன் மகளிர் சுய உதவிக் குழுவின் பெண்கள் கடந்த 4 வருடங்களாக செங்கல் தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து குழுவின் தலைவி வசந்தாவிடம் கேட்டபோது, “நாங்கள் 10 வருடங்களாக கல்குவாரியில் வேலை பார்த்து வந்தோம். அங்கு வேலை இல்லாமல் போய்விட்டதால் மிகவும் சிரமத்துடன் இருந்தோம். அதன் பின் மாவட்ட ஆட்சி தலைவரின் மூலமாக மகளிர் திட்டம் வழியாக இந்த செங்கல் சூளை பணி கிடைத்தது.

இதற்காக நாங்கள் பாண்டிச்சேரி முதல் சென்று பயிற்சி பெற்று அதன்பின் கடந்த நாலு வருடங்களாக இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் குழுவில் 15 பெண்கள் உள்ளனர்.

இதையும் படிங்க : உத்தமர் காந்தி விருது... புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

முதலில் எங்களுக்கு கை மூலம் செங்கல் தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. இதில் அதிக அளவில் செங்கற்கள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மிகவும் சிரமமாக இருந்ததால் அதன் பின் மாவட்ட ஆட்சியரின் உதவியில் மின்சாரம் மூலம் செங்கற்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் கிடைத்தது.

அது தற்போது எங்களுக்கு மிகுந்த பயனைத் தருகிறது அதிகமான செங்கற்களை அதில் உற்பத்தி செய்ய முடிகிறது. அதன் மூலம் உற்பத்தி செய்த செங்கற்களை குறைந்த விலைகளில் கொடுத்து வருகிறோம்.

மேலும் இந்த வேலை வாய்ப்பானது 30 குடும்பத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. வெளி உலகமே தெரியாமல் இருந்தோம். ஆனால் தற்போது பல கூட்டத்திற்கு சென்று சுய தொழில் பற்றி நிறைய கற்றுக் கொண்டோம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எங்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு குடும்பத்திற்கான செலவுகளுக்கு இந்த வேலை வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த வாய்ப்புகளை கொடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்ட அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.

பின்னர் தனது பணியை தொடங்க ஆரம்பித்தார் முத்துமாரியம்மன் சுய உதவிக் குழுவின் தலைவி வசந்தா. இந்த பெண்களின் சாதனை தொடர வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.

செய்தியாளர் : சினேகா விஜயன் - புதுக்கோட்டை 

First published:

Tags: Local News, Pudukkottai