ஹோம் /புதுக்கோட்டை /

31 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த சித்தர்... விராலிமலை குகையில் ஜீவசமாதி?

31 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த சித்தர்... விராலிமலை குகையில் ஜீவசமாதி?

X
புதுக்கோட்டை

புதுக்கோட்டை

Pudukkottai District News : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில்  மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுக்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுக்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாயுமானவர், அருணகிரிநாதர், மற்றும் சதாசிவ சுவாமிகள் போன்ற பல்வேறு யோகிகள் மற்றும் சித்தர்கள் திருவடிகள் பெற்ற புண்ணிய பூமியாக விராலிமலை விளங்குகிறது.

அதேபோல் வாழ்ந்த ஒரு சித்தர் தான் சதாசிவ சுவாமிகள். அவர் இந்த மலையில் குகை ஒன்றில் ஒன்றில் ஜீவசமாதி அடைந்துள்ளதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 31 ஆண்டுகள் ஒரு குகையில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சதாசிவ சுவாமிகளின் குரு சொர்ண சித்தர் ஆவர். குருவிடம் சில வித்தைகளை கற்றுக் கொண்டார் சதாசிவ சுவாமிகள். பின்னர் விராலிமலை வந்தடைந்தார். பின்னர் தன்னை கஷ்டத்தோடும் ஏழ்மையிலும் தேடி வரும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

இதையும் படிங்க : பல்திறன் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள்... புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அசத்தல்...

பசியுடன் வந்து தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு ஒரு கல்லை துணியில் கட்டு கொடுத்தார். மேலும் அதை வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார். அவ்வாறு செய்தபோது ஆச்சரியம் கல் தங்கமாக மாறி இருந்தது. அதேபோல் இவர் மண்ணை கொடுத்தால் அது விபூதியாக மாறுமாம் இவ்வாறு மக்களுக்கு தொண்டு செய்துள்ளதாக சதாசிவ சுவாமிகள் பற்றி இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இவரது நினைவைப் போற்றும் விதமாக சதாசிவ சுவாமிகள் நட்சத்திர பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு குருபூஜைகளோடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும் அதைத்தொடர்ந்து மாபெரும் அன்னதான விழாவும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மங்களகரமான இசையுடன் சேர்ந்து சங்கு முழங்கி பூஜைகள் நடைபெற்றது. வரிசையில் நின்று குகக்குள் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சதாசிவ சுவாமியை வழிபட்டு விட்டு அன்னதான விழாவில் கலந்து உணவு உட்கொண்டனர்.

செய்தியாளர் : சினேகா - புதுக்கோட்டை

First published:

Tags: Local News, Pudukkottai