ஹோம் /புதுக்கோட்டை /

டிராகன் ஃபுரூட் விவசாயத்திற்கு இவ்வளவு மானியமா.. புதுக்கோட்டை விவசாயி புதுமை முயற்சி..

டிராகன் ஃபுரூட் விவசாயத்திற்கு இவ்வளவு மானியமா.. புதுக்கோட்டை விவசாயி புதுமை முயற்சி..

டிராகன்

டிராகன் ஃபுரூட்.. புதுக்கோட்டை

Pudukottai Dragon Fruit Cultivation | புதுக்கோட்டை மாவட்டத்துல் புது முயற்சியாக வேளாண் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலோடு ட்ராகன் ப்ரூட் விவசாயத்தில் இறங்கி இருக்கிறார் சேந்தன்குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pudukkottai | Pudukkottai

புதிய பரிசோதனை முயற்சியாக வறண்ட பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தில் ட்ராகன் ப்ரூட் விவசாயத்தை முயற்சி செய்திருக்கிறார் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. முதல் விளைச்சலில் காய் கிடைக்க மூன்று ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக விவசாயி தெரிவிக்கிறார்.

வெப்ப மண்டல  பயிரான ட்ராகன் ப்ரூட் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டு பல  ரகங்களிலும், நிறங்களிலும் கிடைக்கின்றன. மிகவும் வறட்சி மிகுந்த மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் வேளாண்துறை அதிகாரிகளுடன் ஊக்கத்தோடு விவசாயி ஒருவர் ட்ராகன் ப்ரூட் விவசாயத்தை தொடங்கி இருக்கிறார்.

மானிய உதவி:

வேளாண்துறை சார்பில் இலவசமாக ட்ராகன் ப்ரூட் கன்றுகள் வழங்கப்பட்டதாகவும், மேலும் விவசாயத்திற்குத் தேவையான ஊன்று கல்லிற்கு 30% மானியம் வழங்கி விட்டதாகவும் தெரிவிக்கிறார் சேந்தன்குடியைச் சேர்ந்த விவசாயி தங்க. கண்ணன்.

புதுக்கோட்டை விவசாயி புதுமை முயற்சி..

வாரத்திற்கு இரு முறை நீர் பாய்ச்ச வேண்டும் எனவும், தான் தற்போது வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சுவதாகவும், ஆனால் சொட்டு நீர் பாசனம் இந்த பயிருக்கு உகந்த நீர் பாய்ச்சும் முறை எனவும் தெரிவிக்கிறார் தங்க. கண்ணன்..

நடவு முறை:

ஒரு ஏக்கரில் ட்ராகன் ப்ரூட் பயிரிட வேண்டும் என்றால் ஒவ்வொரு கல்லிற்கும் 7 அடி இடைவெளி விட்டு ஊன்று கல்லை நட வேண்டும் எனவும், அதன்படி ஒரு ஏக்கருக்கு 750 முதல் 800 கற்களை நட முடியும் எனவும் தெரிவிக்கிறார். ஒரு ஊன்று கல்லிற்கு நான்கு ட்ராகன் ப்ரூட்டை நடவு செய்யலாம் எனவும், அந்த பயிர் கொடி போலப் பரவி அதே கல்லின் மீதே வளர்ந்து விடும் எனவும் தெரிவிக்கிறார்.

புதுக்கோட்டை விவசாயி புதுமை முயற்சி..

தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ஏக்கரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் 2 முதல் 4 லட்ச ரூபாய்க்கு ட்ராகன் ப்ரூட் லாபம் தருவதாகவும், வெப்ப மண்டலப் பகுதியாகவும் வறண்ட பகுதியாகவும் இருக்கும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் கற்றாழை வகையைச் சேர்ந்த ட்ராகன் ப்ரூட்டை தன்னால் அதை விட கூடுதலான லாபம் பெற முடியும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் விவசாயி தங்க. கண்ணன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ட்ராகன் ப்ரூட் விவசாயத்தை ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆவதாகவும், முதல் முறை அறுவடை செய்ய ட்ராகன் ப்ரூட் விவசாயத்தில் மூன்று ஆண்டுகள் ஆகும் எனவும் அதுவரையிலும் உழைப்பை விவசாயத்தில் போட்டால் அதன் பின்னர் அதற்குரிய பலனை தான் பெற முடியும் என்று நம்பிக்கையுடன் ட்ராகன் ப்ரூட் விவசாயத்தில் இறங்கியிருக்கிறார் விவசாயி தங்க கண்ணன்.

Published by:Arun
First published:

Tags: Fruits, Local News, Pudukkottai